சாமானியர்கள் கவலை.. தங்கம் விலை மீண்டும் ஏற்றம்.. விலை குறையுமா.. வாய்ப்பிருக்கா?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. இது சாமானியர்கள் வாங்க சரியான தருணமா?

சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்த சரிவானது தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை தொடர் உயர்வு.. என்ன காரணம்..?

சரிவில் தங்கம் விலை

சரிவில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இரண்டு தினங்களுக்கு பிறகு இன்று சற்றே சரிவில் காணப்படுகின்றது. அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்றே தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் இந்த சரிவானது இப்படியே தொடருமா என்பது தான் சந்தேகமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் டெக்னிக்கலாக பார்க்கும்போது இன்னும் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக தங்கம் விலையானது தற்போது சரிவினைக் கண்டு இருந்தாலும், குறைந்த விலையில் வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.

காத்திருக்கும் கரடி

காத்திருக்கும் கரடி

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், கரடியும் பதுங்கியிருக்கிறது. ஆக சந்தை எப்போது வேண்டுமென்றாலும் சரிவினைக் காணலாம். ஆக அப்படி சரியும் பட்சத்தில் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடானது வெளியாகவிருக்கும் நிலையில், அதனை பொறுத்து சந்தையில் தாக்கம் இருக்கலாம்.

தங்கம் விலையை தூண்டும் பணவீக்கம்
 

தங்கம் விலையை தூண்டும் பணவீக்கம்

தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையேயானது பதற்றமானது அதிகரித்து வரும் நிலையில், இது சர்வதேச அளவில் பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பணவீக்கத்துக்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கத்திற்கு சாதகமான அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம்.

ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை

தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா மீதான அழுத்தமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஒரு புறம் உக்ரைன் படைகளை எதிர்த்து போராடி வரும் ரஷ்ய, மறுபுறம் உலக நாடுகளின் தடைகளால் சற்றே பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் அதிகரிக்கலாம்

பணவீக்கம் அதிகரிக்கலாம்

இதற்கிடையில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்துள்ள நிலையில், இயற்கை எரிவாயு, நிலக்கரி விலை என பலவும் தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கம் என்பது மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கலாம். இது சர்வதேச மத்திய வங்கிகளை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சப்ளை சங்கிலி பாதிப்பினால் விலை அதிகரித்துள்ள நிலையில், இது பணவீக்கத்தினையும் அதிகரிக்கலாம்.

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

தங்கத்தின் விலையானது தினசரி கேண்டில், 5 மணி நேரம், 1 மணி நேரம் என பலவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றன. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள், விலை குறையும்போது வாங்கி வைக்கலாம். இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு லாபகரமான முதலீடாக இருக்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 4.50 டாலர்கள் குறைந்து, 1941.10 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.13% அதிகரித்து, 24.855 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. இதற்கிடையில் வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றம் கண்டாலும், நீண்டகால நோக்கில் சற்று ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து, 52,084 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது இந்திய சந்தையில் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 67,080 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 4925 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 39,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 5373 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 42,984 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 53,730 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது அதிகரித்தெ காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 4.70 ரூபாய் அதிகரித்து, 71.70 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 717 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 4700 ரூபாய் அதிகரித்து, 71,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.எனினும் நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கம்,டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா – உக்ரைன் பேச்சு வார்த்தை, கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on April 11th, 2022: gold prices starting to move higher, but bears are lurking

gold price on April 11th, 2022: gold prices starting to move higher, but bears are lurking/ சாமானியர்கள் கவலை.. தங்கம் விலை மீண்டும் ஏற்றம்.. விலை குறையுமா.. வாய்ப்பிருக்கா?

Story first published: Monday, April 11, 2022, 11:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.