சென்னை அயோத்தியா மண்டபம் பிரச்னை: கரு நாகராஜன்- பா.ஜ.க-வினர் கைது

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்ற வந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் கடந்த 1954-ம் ஆண்டு கட்டப்பட்டது அயோத்தியா மண்டபம். ராம சமாஜம் என்ற அமைப்பு நிர்வகித்து வரும் இந்த மண்டபம் கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனாலும் இந்த உத்தரவை எதிர்த்து ராம சமாஜம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணயின் போது மண்டபடத்தின் உள்ளே ஆஞ்சநேயர் சிலை வைத்து வழிபடுவதாகவும், இங்கு வழிபாட்டிற்காக ஏராளமான பொதுமக்கள் வந்துகொண்டிருப்பதாகவும் கூறிய இந்து அறநிலையத்துறை, சட்டப்படி இங்கு சிலை வைத்து வழிபடுவதால், இந்த மண்டபம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ராம சமாஜம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று மண்டபத்தை பார்வையிடசென்றபோது அங்கு கூடியிருந்த உமா ஆனந்தன், கரு.நாகராஜ் உள்ளிட்ட பாஜக பிரபலங்கள் பலரும் அதிகரிகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் உமா ஆனந்தன் ஷோ காஸ் நோட்டீஸ் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அதிகாரிகள் கொடுத்த நோட்டீஸை பார்த்த கரு.நாகராஜ் இன்றைய தேதியில் நோட்டீஸ் உள்ளது. இத்தனை ஆண்டுகள் பழமையான ஒரு இடத்தை பிடிக்க இன்றைய தேதியில் நோட்டீஸ் கொண்டு வருவர்களா என்று அதிகாரிகளிடம் ஆவேசமான கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ததை தொடர்ந்து மண்டபத்தில் கேட் திறக்கப்பட்டு அதிகாரிகள் மண்டபத்தை பார்வையிட்டனர். வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட உமா ஆனந்தன் ராமர் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார் போலீசார் ஒழிக என்று கோஷம் எழு்பபியபடி சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

இது தொடர்பாக எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், அயோத்யா மண்டபம் தொடர்பான அறநிலையத் துறைக்கு எதிரான வழக்கு நம்பராகி நாளை விசாரணைக்கு வர உள்ளது. எனவே வழக்கு sub judice ஆக உள்ள நிலையில் அறநிலைய துறையின் செயல் Criminal Trespass. அதிலும் கோவிலில் கதவை இடித்து சேதப்படுத்திக் கொண்டிருப்பது காட்டுமிராண்டித்தணம்

1956 ல் உருவாக்கப்பட்ட அயுக்தா மணடபம் பஜனைமடம் தமிழக இந்து விரோத அரசால் சட்ட விரோதமாகவும், வன்முறையுடனும் கையகப்படுத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பஜனை மடத்துள் செருப்புக்காலுடன் நுழைந்து இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்திய காவல்துறையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.