இரவின் நிழலுக்கு புதிய அங்கீகாரம்

ஒருவர் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு படத்தை இயக்கினார் பார்த்திபன். அவர் ஒருவரே நடித்து அவரே இயக்கிய படம் என்கிற வகையில் அது புதுமையாக இருந்தது. தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது. இந்த நிலையில் அடுத்த முயற்சியாக ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தை முதல் நான் – லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற மே 1ம் தேதி சென்னை தீவு திடலில் பிரமாண்டமாக நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.