இவரை வச்சுக்கங்க.. எங்க ஆட்களை திருப்பி அனுப்புங்க.. ரஷ்யாவுக்கு ஆஃபர் தரும் உக்ரைன்!

ரஷ்ய ஆதரவு எதிர்க்கட்சித் தலைவரை உங்களிடம் அனுப்புகிறோம். பதிலுக்கு நீங்கள் பிடித்து வைத்திருக்கும் எங்களது வீரர்களையும், பெண்களையும் திருப்பி அனுப்புங்க என்று ரஷ்யாவுக்கு,
உக்ரைன் அதிபர்
விலாடிமிர் ஜெலன்ஸ்கி செய்தி அனுப்பியுள்ளார்.

உக்ரைன் போர்
எப்போது முடியும் என்று தெரியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உக்ரைன் இறங்கி வருவதாக தெரியவில்லை. ரஷ்யாவும் விடுவதாக தெரியவில்லை. ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் தரைமட்டமாகியுள்ளன. கார்கிவ் நகரம் சுடுகாடு போல காட்சி தருகிறதாம். அந்த அளவுக்கு ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாக உள்ளது.

ஒரு பக்கம்
ரஷ்யா
தாக்கி வரும் நிலையில், உக்ரைனுக்கு பெருமளவிலான ஆயுதங்களை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்த ஆயுதங்கள் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால் இதற்கெல்லாம் ரஷ்யா பயப்படுவது போல தெரியவில்லை. தொடர்ந்து தாக்குதலை அது தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

குஷ்பு மகாராஷ்டிராவா.. “பிரவுட் தமிழச்சி” இல்லையா?.. சலசலக்கும் பாஜக பிரஸ் ரிலீஸ்!

இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஒரு ஆஃபரை அறிவித்துள்ளது உக்ரைன். அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் விக்டர் மெட்வட்சுக்கை அது பிடித்து வைத்துள்ளது. இவர் ரஷ்யாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் தனது மகளுக்கு காட்பாதர் போல என்று அவர் பலமுறை கூறியுள்ளார். இவரை வீட்டுக் காவலில் வைத்திருந்தது உக்ரைன். இவர் மீது தேச துரோக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் வீட்டுக் காவலிலிருந்து தப்பி விட்டார். அவரை தற்போது சிறை பிடித்துள்ளது உக்ரைன்.

இவரை வைத்து தற்போது உக்ரைன் ஒரு கேம் ஆட ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்ய அரசுக்கு நாங்கள் ஒரு யோசனை சொல்கிறோம். இவரை வைத்துக் கொள்ளுங்கள். எங்களது வீரர்கள், பெண்களை உடனடியாக திருப்பி அனுப்புங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கையில் விலங்கு போடப்பட்ட நிலையில் உட்கார்ந்திருக்கிறார் மெட்வெட்சுக். ராணுவத்தினர் அணியும் சீருடை போல இவர் அணிந்துள்ளார். இவரை சிறப்பு ஆபரேஷன் படையினர் கைது செய்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புப் படை தலைவர் இவான் பகனோவ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் இதுவரை எந்த பலனையும் கொடுக்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்துளளது. கடந்த 7 வாரமாக போர் நடந்து வரும் நிலையில் இதுவரை பல கட்ட பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. ஆனால் எந்த உடன்பாடும் இதுவரை ஏற்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.