ம.பி. ராம நவமி ஊர்வலத்தில் கற்களை வீசியவர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் ராம நவமிஊர்வலத்தில் கற்களை வீசியவர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன.

கடந்த 10-ம் தேதி நாடு முழுவதும் ராம நவமி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மத்திய பிரதேசம் கார்கோன் பகுதியில் நடைபெற்ற ரத ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 30 கடைகள், வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

சமூக விரோதிகள் பல்வேறுவீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்தினர். உயிருக்கு அஞ்சி சுமார் 70 குடும்பங்கள் வீடுகளை விட்டுவெளியேறி உள்ளன. வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.

மாவட்ட எஸ்.பி. சித்தார்த் சவுத்ரிசம்பவ இடத்துக்கு நேரில் சென்றுவன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தார். அவர் உட்பட10 போலீஸாரும் காயமடைந்துள்ள னர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் 3 நாட்களுக்கு கார்கோன் பகுதியில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் மீது உள்ளாட்சி நிர்வாகம் நேற்று முன்தினம்நடவடிக்கை எடுத்தது. 12 வீடுகள், 22 கடைகள் இடிக்கப்பட்டன. மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, “கலவரக்காரர்கள் நடத்திய தாக்குதலில் அரசு, தனியார் சொத்துகள் சேதமடைந்துள் ளன. இதற்கான இழப்பீடு கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப் படும்” என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி கண்டனம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர்ராகுல் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “பணவீக்கம்,வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் அவதி யடைந்து வருகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கு பாஜக அரசு தீர்வு காண விரும்பவில்லை. மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்பி புல்டோசர் மூலம் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது” என்றுகுற்றம் சாட்டியுள்ளார். – பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.