விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவான டாணாக்காரன் படத்தை பாராட்டிய பிரபல நடிகர்…!

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘
டாணாக்காரன்
‘ படத்தை சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த்
பாராட்டியுள்ளார்.

வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் ‘டாணாக்காரன்’ திரைப்படம் சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது.

இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக
அஞ்சலி நாயர்
நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.ஆர் .பிரபு தயாரித்துள்ளார்.
ஜிப்ரான்
இசையமைத்துள்ளார்.காவலர் பயிற்சிப் பள்ளி உள்ளே நடைபெறும் பிரச்சனைகள், பயிற்சி பெறுபவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை கண் முன்னே பார்க்க முடிந்தது.

அடுதகட்டதுக்கு சென்ற பீஸ்ட் கொண்டாட்டம்…! அதுகுன்னு இப்படியா…!

இந்தப்படத்திற்காக விக்ரம் பிரபு கடினமாக உடற்பயிற்சி செய்து 9 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக விக்ரம் பிரபு,
லால்
மற்றும்
எம்எஸ் பாஸ்கர்
ஆகியோரின் நடிப்பு மெச்சும் படியாக அமைந்திருந்தது.

இந்நிலையில் தற்போது ‘டாணாக்காரன்’ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நான் கனவு காண கூடதயங்கும் ஒன்று நடந்துள்ளது எத்தனை அருமையான உணர்வு. சூப்பர் ஸ்டார் அவர்களே அழைத்து என்னைப் பாராட்டியுள்ளார்.

நம் கனவை விடாப்பிடியாகப் பின்பற்றுவது வாழ்க்கையில் இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகளை உருவாக்கும் என்பது உண்மை. மேலும் டாணாக்காரன் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.