Tropical Storm: பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு 138 பேர் பலி

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்பமண்டல புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. நிலச்சரி மற்றும் வெள்ளத்தினால் குறைந்தது 138 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்ப மண்டலப் புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. கேபிஸ், அக்லான், ஆண்டிக் மற்றும் இலோய்லோ மாகாணங்களில் 159 பகுதிகளில் கடந்த புதன்கிழமை  (ஏப்ரல் 13ம் தேதி) வெப்பமண்டலப் புயல் தாக்கியது. மெகி  என்று பெயரிடப்பட்ட இந்த புயலால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள் வெள்ளம் மற்றும் மோசமான நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் இதுவரை 101 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேபே நகர அரசு தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸை தாக்கிய வெப்பமண்டல புயல் மெகிக்கு பலியானோர் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | உக்ரைக்கு $800 மில்லியன் இராணுவ உதவி; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு

பிலிப்பைன்ஸின் மத்திய (central Philippines) மற்றும் தெற்குப் பகுதிகள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டன, புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட மத்திய லெய்ட் மாகாணத்தில் 132 பேர் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

லெய்ட் மாகாணத்தில் உள்ள அபுயோக் நகரில் 31 சடலங்களும், சமர் மாகாணத்தில் ஒன்றும், செபு மாகாணத்தில் இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள கேபிஸ், அக்லான், ஆண்டிக் மற்றும் இலோய்லோ மாகாணங்களில் புதன்கிழமை நிலவரப்படி 159 பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் கூறியது, மெகி புயலின் தாக்கம் குறித்து சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலத்தை கடந்த மெகி புயல், இந்த ஆண்டு தென்கிழக்கு ஆசிய நாட்டை தாக்கும் முதல் வெப்பமண்டல புயல் ஆகும். பசிபிக் டைஃபூன் பெல்ட்டில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டம் ஆண்டொன்றுக்கு சுமார் 20 சூறாவளி மற்றும் புயல்களால் பாதிக்கப்படுகிறது. உலகின் மிகவும் பேரழிவு வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இளவரசி பட்டமும் காதலுக்கு முன் கால் தூசு: ஜப்பான் மங்கை மாகோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.