ஒப்போ F21 Pro சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனை! சிறப்பம்சங்கள் மற்றும் சலுகைகள்!

ஒப்போ
வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் நிறுவனம், இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஒப்போ எஃப் 21 ப்ரோ 4ஜி மற்றும் ஒப்போ எஃப் 21 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டு வேரியன்டுகள் இந்த நிகழ்வில் அறிமுகமானது.

இதில் 4ஜி வேரியன்ட் ஸ்னாப்டிராகன் 680 புராசஸருடனும், 5ஜி வேரியன்ட் ஸ்னாப்டிராகன் 695 புராசஸருடன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்போ எஃப் 21 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஒப்போவின் புதிய பிரீமியம் 4ஜி போன், Full HD+ அமோலெட் டிஸ்ப்ளே உடன் வெளியானது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ஆக்டாகோர் சிப்செட் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ColorOS கொண்டு இயங்குகிறது

புதிய ஒப்போ 4ஜி போனில் 8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும் இதில் இருக்கும். ஸ்மார்ட்போன் கேமராவைப் பொருத்தவரை, பின்பக்கம் 64MP மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2MP மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா ஆகிய டிரிப்பிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் கேமரா வழங்கப்படலாம். போனை 4500mAh பேட்டரி சக்தியூட்டுகிறது. இதனை 33W பாஸ்ட் சார்ஜிங் ஊக்குவிக்கிறது. ஸ்மார்ட்போன் உடன் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.

150W பாஸ்ட் சார்ஜிங் இதுல இருக்காம் – ரியல்மி GT Neo 3 ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி உறுதி!

ஒப்போ எஃப் 21 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்

ஒப்போவின் புதிய ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் Full HD+ அமோலெட் டிஸ்ப்ளே உடன் வெளியாகலாம். இதில் Qualcomm ஸ்னாப்டிராகன் 695 5ஜி ஆக்டாகோர் சிப்செட் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ColorOS கொண்டு இயங்குகிறது

புதிய ஒப்போ 5ஜி போனில் 8GB ரேம், 128GB, 256GB ஸ்டோரேஜ் மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும் இதில் இருக்கும். ஸ்மார்ட்போன் கேமராவைப் பொருத்தவரை, பின்பக்கம் 64MP மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16MP மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா ஆகிய டிரிப்பிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் கேமரா வழங்கப்படலாம். போனை 4500mAh பேட்டரி சக்தியூட்டுகிறது. இதனை 33W பாஸ்ட் சார்ஜிங் ஊக்குவிக்கிறது. விலையைப் பொருத்தவரை ஒப்போ 4ஜி போன் விலை ரூ.22,999 ஆகவும், ஒப்போ 5ஜி போன் விலை ரூ.26,999 ஆகவும் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் 49 ரூபாய்க்கு ஓடிடி அணுகல்… களைகட்டும் Tata Play திட்டங்கள்!

ஒப்போ Enco Air 2 ப்ரோ சிறப்பம்சங்கள்

சமீபத்தில் அறிமுகமான
Oppo Enco Air 2 Pro
ஆனது 12.4mm டைனமிக் டிரைவர்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) ஆதரவு இதில் இருக்கலாம். புதிய ஒப்போ இயர்பட்ஸ், USB Type-C சார்ஜிங்கிற்கான ஆதரவுடன், 28 மணிநேரம் பேட்டரி பேக்கப்பை வழங்கலாம். இந்தியாவில் இதன் விலை ரூ.3,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Oppo-F21-Pro-5G விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Qualcomm Snapdragon 695டிஸ்பிளே6.43 inches (16.33 cm)சேமிப்பகம்128 GBகேமரா64 MP + 2 MP + 2 MPபேட்டரி4500 mAhஇந்திய விலை26999ரேம்8 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.