மலிவு விலை மேட் இன் இந்தியா போன்! வெளியிட தயாராகும் கைக்ரோமேக்ஸ்!

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான
மைக்ரோமேக்ஸ்
விரைவில் தனது மலிவான கைபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான மைக்ரோமேக்ஸ் இன் 2சி-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த போன் சான்றிதழ் பதிவு தளத்தில் காணப்பட்டது.

மேலும், போன் குறித்த தகவல்களும் கசிந்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் இன் 2சி
ஸ்மார்ட்போனின் விலை அறிமுகத்திற்கு முன்பே வெளியாகியுள்ளது. கசிந்துள்ள தகவல்களின்படி, இந்த மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000-க்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டால், சந்தையில் இருக்கும் ரெட்மி 9 சீரிஸ், டெக்னோ ஸ்பார்க் 8 போன்ற ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக போட்டியிடும். இந்திய தயாரிப்பான இந்த ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

முதல் MIUI GO எடிஷனைப் பெறும் போக்கோ போன் எது தெரியுமா!

மைக்ரோமேக்ஸ் இன் 2சி அம்சங்கள் (Micromax IN 2C Specifications)

கசிந்த தகவல்களின்படி, நிறுவனம் மைக்ரோமேக்ஸ் இன் 2C ஸ்மார்ட்போனை அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும். இந்த போன் GeekBench 5 பெஞ்ச்மார்க் தளத்தில் காணப்பட்டது. அதன்படி, Micromax In 2C ஆனது Unisoc T610 புராசஸர் கொண்டு இயக்கப்படும். இது 1.8GHz வேகம் கொண்ட ஆக்டாகோர் புராசஸர் ஆகும்.

மைக்ரோமேக்ஸ் இன் 2சி 4GB ரேம் உடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான இயங்குதளத்தைக் கொண்டிருக்கும். மாடல் எண் E6533 கொண்ட போன் Bureau of Indian Standards இணையதளத்தில் காணப்பட்டது. இது Google Play பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைலில் போனின் டிஸ்ப்ளே இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

தகவல்கள் எதையும் நிறுவனம் உறுதிபடுத்தவில்லை என்பதால், Micromax In 2C இன் அதிகாரப்பூர்வ விலை மற்றும் விவரக்குறிப்புகள் அறிமுகத்திற்குப் பிறகுதான் தெரியவரும். மைக்ரோமேக்ஸ் அடுத்த மாத தொடக்கத்தில் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்திய டெக் சந்தையில் அறிமுகம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது பட்ஜெட்டை சமர்ப்பிக்கலாம்.

ஸ்மார்ட்போன் வாங்கியாச்சு… முதலில் என்ன செய்ய வேண்டும்!

மைக்ரோமேக்ஸ் இன் 2B (Micromax IN 2B Specifications)

Micromax முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மைக்ரோமேக்ஸ் IN 2B போனை அறிமுகம் செய்திருந்தது. இந்த போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையில் இயக்கப்படுகிறது. இதில் 6.52″ இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் Unisoc T610 புராசஸர் நிறுவப்பட்டுள்ளது. மேலும், 64GB வரை ஸ்டோரேஜ் மெமரியும் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் கேமராவைப் பொருத்தவரை 13MP மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் புகைப்படம் எடுப்பதற்கான இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.8,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

Micromax-IN-2C விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Unisoc T610டிஸ்பிளே6.52 inches (16.56 cm)சேமிப்பகம்64 GBகேமரா13 MP + 2 MPபேட்டரி5000 mAhஇந்திய விலை7999ரேம்4 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.