இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இன்னும் குறையுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்றும் பலத்த சரிவில் காணப்படுகின்றது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது அவ்வப்போது சற்று தடுமாற்றத்தினை கண்டாலும், தொடர்ச்சியாக ஏற்றத்திலேயே இருந்து வந்தது.

இது நிபுணர்களின் கணிப்பினை போல சில தினங்களுக்கு முன்பு அவுன்ஸூக்கு 2000 டாலர்களையும் தொட்டது. எனினும் அதன் பிறகு சரியத் தொடங்கிய தங்கம் விலையானது இரண்டாவது நாளாக இன்றும் சரிவில் காணப்படுகின்றது.

இது முதலீட்டாளார்கள் புராபிட் புக்கிங் செய்வதால் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பல காரணிகளும் தங்கத்திற்கு எதிராகவே உள்ளன.

சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்.. ஆட்டோ, ஐடி பங்குகளுக்கு அதிகப்படியான டிமாண்ட்..!

இனி எவ்வளவு குறையும்?

இனி எவ்வளவு குறையும்?

இதற்கிடையில் தங்கம் விலையானது இனி எப்படி இருக்கும்? இன்னும் மீடியம் டெர்மில் எவ்வளவு குறையலாம்? இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமா? தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

2 வருட உச்சத்தில் டாலர்

2 வருட உச்சத்தில் டாலர்

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது 2 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இது மற்ற நாணயதாரர்களுக்கு தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் குறைய காரணமாக அமைந்துள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உச்சத்தில் பத்திர சந்தை
 

உச்சத்தில் பத்திர சந்தை

இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க பத்திர சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது 2.9% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ள நிலையில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளது. இதன் காரணமாகவும் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.

பங்கு சந்தைகள் ஏற்றம்

பங்கு சந்தைகள் ஏற்றம்

சர்வதேச பங்கு சந்தைகள் வலுவான டாலர் மதிப்பு, வலுவான பத்திர சந்தைகளுக்கு இடையே, பங்கு சந்தையும் ஏற்றம் கண்டுள்ளது. இது தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளது. இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கவனிக்க வேண்டிய காரணிகள்

கவனிக்க வேண்டிய காரணிகள்

தங்கம் விலையானது சரிவில் காணப்பட்டாலும், கச்சா எண்ணெய் விலை சரிவு, சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரம் குறித்த கணிப்பு, பணவீக்கம் குறித்த கணிப்பு உள்ளிட்ட சிலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன. இதற்கிடையில் இரண்டாம் கட்ட போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் வீரர்களை தொடர்ந்து சரணடைய கூறி வருகின்றது. இது மேற்கொண்டு சர்வதேச அளவில் பெரியளவில் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் பொருளாதாரம்

சீனாவின் பொருளாதாரம்

சீனாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் அங்கு கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது சரிவினைக் காணலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. சர்வதேச அளவில் மிகப்பெரிய நுகர்வோரான சீனாவில் தங்கத்தின் தேவையானது சரிவடையலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது 13.60 டாலர்கள் குறைந்து, 1945.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.83% குறைந்து, 25.180 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 319 ரூபாய் குறைந்து, 52,430 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 454 ரூபாய் குறைந்து, 68,316 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கேப் டவுன் ஆகி சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 72 ரூபாய் குறைந்து, 4957 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 576 ரூபாய் குறைந்து, 39,656 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 77 ரூபாய் குறைந்து, 5410 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 616 ரூபாய் குறைந்து, 43,280 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 54,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.40 ரூபாய் குறைந்து, 73.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 735 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1400 ரூபாய் குறைந்து, 73,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது வலுவான டாலர், பத்திர சந்தை ஏற்றம் உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on April 20th 2022: gold price today down amid strong dollar and stable global markets

gold price on April 20th 2022: gold price today down amid strong dollar and stable global markets/இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இன்னும் குறையுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.