பேண்டமிக் முடிஞ்ச பிறகு கொடைக்கானல் எப்படி இருக்கு? அர்ச்சனா- சாரா வீடியோ

VJ Archana kodaikanal tour with his family viral video: தொகுப்பாளினி அர்ச்சனா தன் குடும்பத்தினருடன் கொடைக்கானல் டூர் சென்று வந்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சன் டிவியின் காமெடி டைம் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் அர்ச்சனா. பின்னர் சன் டிவி, ஜீ தமிழ் என பல்வேறு சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் விஜய் டிவிக்குள் எண்ட்ரியானார் அர்ச்சனா. தற்போது விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

இதனிடையே அர்ச்சனா யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இவரது வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம். மேலும் அவரது மகள் ஸாரா உடன் இணைந்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: இந்த கோடையில் நீங்கள் அவசியம் செல்ல வேண்டிய மலை வாச ஸ்தலங்கள்!

அந்த வகையில், தற்போது கொடைக்கானலுக்கு தன் குடும்பத்தினருடன் சென்று வந்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. அதில் ஏன் கோடி கோடியா கொடுத்து ஸ்விட்சர்லாந்து போறீங்க. கொடைக்கானல்ல இல்லாத அழகா, இங்க வந்து பாருங்க என்று அர்ச்சனா சொல்கிறார்.

குணா குகை, படகு சவாரி, ஏரியை சுற்றியுள்ள அழகை ரசித்தல், இதையெல்லாம் செய்ததாக ஸாரா கூறியுள்ளார். கொடைக்கானலின் உயரமான பகுதியில் நின்று கொடைக்கானலின் அழகை விவரிக்கிறார் அர்ச்சனா.

பின்னர் அர்ச்சனாவும் ஸாராவும் லிலிரில் விளம்பரம் எடுத்த நீர்விழ்ச்சி அருகே நின்று, இங்கு தண்ணீர் கிரிஸ்டல் கிளியராக இருப்பதாகவும், தொற்று நோயால் இங்கு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டதாகவும், இப்போது நிலைமை சீராகி வருவதாகவும், மக்கள் கொடைக்கானல் வந்த அதன் அழகை ரசிக்க வேண்டும் என்றும் அர்ச்சனா அழைப்பு விடுத்துள்ளார்.

பின்னர் கொடைக்கானலின் காடுகள் மற்றும் அங்குள்ள மரங்களின் அழகு மற்றும் சிறப்பு குறித்து அர்ச்சனாவும் ஸாராவும் மாறி மாறி விவரிக்கிறார்கள்.  அடுத்ததாக கொடைக்கானலின் பேவரைட் விமலா பிரட் ஆம்லெட் கடையில் சாப்பிடுகிறார்கள்.

அதன்பின் காடுகளில் வாழும் மக்கள் இனத்தை குறிக்கும் சிலை குறித்து அர்ச்சனா விளக்குகிறார். மேலும் அவர்கள் திருமணம் செய்யும் முறை குறித்தும் விளக்குகிறார்.

இவ்வாறாக கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தளங்கள் குறித்த தகவல்களை இந்த வீடியோவில் அர்ச்சனா பகிர்ந்துள்ளார். வீடியோவை பார்க்கும்போது, கொடைக்கானலை முழுவதுமாக சுற்றிப் பார்த்த உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது. மேலும் கொடைக்கானல் சென்று வர வேண்டும் ஆசையையும் இந்த வீடியோ தூண்டுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.