ஆளுனர் உயிருக்கு ஆபத்து: ஜனாதிபதி, பிரதமருக்கு அ.தி.மு.க புகார் மனு

Tamil Admk Complaint Against DMK Government : தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இது குறித்து திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி அதிமுக சார்பில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என.ரவி நேற்று முன்தினம் சிதம்பரத்தில் தருமபுரம் ஆதினத்தில் ஞானரத்தை திறந்து வைத்தார். அப்போது அவருக்கு எதிராக சிலர் கறுப்பு கொடி காண்பித்துள்ளனர். மேலும் ஆளுனரின் இந்த பயணம் குறித்து திமுக தரப்பில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மயிலாடுதுறையில், திமுக கூட்டணி கட்சிகள் ஆளுனருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆளுனரின சுற்றுப்பயணத்தின்போது அவரது கார் மீது கற்கல் வீசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் இந்த கான்வேயில் ஆளுனருடன் வந்த இரண்டு வாகனங்கள் மீது கறுப்புகொடி வீசப்பட்டதாகவும், கூறப்பட்ட நிலையில், இது போன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றும், போலீசார் இருந்ததால் கல்வீச்சு சம்பவம் தடுக்கப்பட்டதாகவும், காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனாலும் இந்த சம்பவத்திற்கு பாஜக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஆளுனர் வாகனத்தின் மீது கல்வீச்சு, கறுப்பு கொடி வீச்சு போன்ற செயல்கள் நடைபெற்றுள்ளது.இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும், ஆளனரிடம் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இது குறித்து உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத போவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதனால் தற்போது தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பாகி வரும் நிலையில், ஆளுனர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிமுக சார்பில், குடியரசு தலைவர், பிரதமர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பலருக்கும் அதிமுக சட்டக்குழு உறுப்பினர் பாபு முருகவேல் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  

இந்த மனுவில். தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படவில்லை. போதை பொருள் பழக்கம் அதிகரித்து பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை திறம்பட கையாளாத திமுக அரசு தமிழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.

இதனை கருத்தில் கொண்டு அரசியமைப்பு சாசன சட்டத்தின்படி திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிப்பட்டுள்ளர். ஆளுனரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்று அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.