'பீஸ்ட்' படத்தால் டானுக்கு வந்த சோதனை: சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு.!

சிவகார்த்திகேயன்
நடிப்பில் அண்மையில் வெளியான ‘டாக்டர்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர்
சிபி சக்கரவர்த்தி
இயக்கும் ‘
டான்
‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

‘டான்’ படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடேக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ‘டங்காமாரி ஊதாரி மற்றும் ஆலுமா டோலுமா பாடல்கள் புகழ் ரோகேஷ் எழுதிருந்த “ஜலபுலஜங்கு” பர்ஸ்ட் சிங்கிளை அனிருத் பாடியிருந்தார். இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

‘விக்ரம்’ படம் இப்படித்தான் இருக்கும்: வெளியான செம மாஸ் தகவல்.!

இந்நிலையில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘டான்’ படத்திற்கான புரோமோஷன் பணிகள் இன்னும் துவங்காததால் அதிருப்தியில் உள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் இந்த மாதம்
பீஸ்ட்
மற்றும் கே ஜி எஃப் படம் குறித்த செய்திகள் மட்டும் தான் சோஷியல் மீடியா முழுவதும் நிரம்பி வழிந்தது. இதன் காரணமாகவே ‘டான்’ படத்தின் புரோமோஷன் வேலைகளை துவங்காமல் இருந்துள்ளனர் ரசிகர்கள்.

தற்போது பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் படம் தொடர்பான செய்திகள் இணையத்தில் குறைய துவங்கியுள்ளன. இந்த சமயத்தில் ‘டான்’ பட புரோமோஷன் வேலைகளை துவங்கினால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என முடிவு செய்துள்ளனராம் படக்குழுவினர். ‘டான்’ படம் மே 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தளபதி தான் MASS; Beast தான் First; ரசிகர்கள் கருத்து!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.