இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சாதனைக்காக விருது பெற்ற நடிகை ராதிகா…!

இங்கிலாந்து
நாடாளுமன்றத்தில் தனது சாதனைகளுக்காக
விருது
பெற்று உரையாற்றிய
ராதிகா
சரத்குமார் திரைத்துறை குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.தென்னிந்திய திரையுலகில் 1980 முதல் 1995-ஆம் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக அறியப்பட்ட நடிகை ராதிகா . பிறப்பால் திரைக்குடும்பத்தை சேர்ந்துள்ள இவர் தமிழில்
கிழக்கே போகும் ரயில்
திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

தமிழ் திரைப்படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியுள்ள இவர், இதன் பிரபலத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்றுள்ளார். பின்னர்இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் மற்றும் அரசியல்வாதியான
சரத்குமார்
என்பவரை திருமணம் செய்துள்ளார்.

‘டான்’ படத்தின் தாறுமாறு அப்டேட்: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!

ராதிகா சரத்குமார் தற்போது திரையுலகில் தாய் மற்றும் கௌரவ கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் பிரபலமானவர். திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

தமிழ் ஸ்டடீஸ் யூகே
எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்
மரியா மில்லர்
ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார், “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.