“மலிவான விளம்பரத்துக்காக தவறான கருத்தை பரப்புகிறார் அண்ணாமலை”- செந்தில் பாலாஜி பேட்டி

தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் சில நிமிடங்களுக்கு முன் ஈடுபட்டிருந்தார். அந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசு மேல் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வைத்த `மின்வெட்டு’ தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார் அவர்.
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இன்று மாலை செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “தமிழகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை திமுக ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு அமைச்சர்கள் பணம் சம்பாதிக்கவே TANGEDCO-வை பயன்படுத்துகிறார்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “தமிழகத்தில் இந்த ஆண்டில் 29.3.2022 வரை 17,196 மெகா வாட் மின் தேவை ஏற்பட்டது. அதை முழுவதும் பூர்த்தி செய்தோம். ஏப்ரல் மற்றும் மே மாதத்தை சமாளிக்கவும் தேவைக்கு ஏற்ப கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு அதையும் விநியோகம் செய்தோம். இந்நிலையில் தமிழகத்துக்கான நிலக்கரி வருகை குறைவாக உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். இன்றும்கூட முதல்வர் இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
image
இந்த நிலக்கரியை நாமும்கூட இறக்குமதி செய்யலாம். ஆனால் சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை அதிகம். அதனால் நாம் இறக்குமதி செய்யவில்லை. இதுவொரு பக்கமிருக்க மத்திய தொகுப்பில் இருந்து 714 மெகா வாட் கடந்து 2 நாட்களாக கிடைக்கவில்லை. இந்த பற்றாக்குறையை சரி செய்ய 550 மெகா வாட் வெளி மாநிலங்கலிலிருந்து பெறப்படுகிறது. நாளை முதல் சீரான மின்விநியோகம் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
போலவே தூத்துக்குடியில் தொடர்ந்து ஐந்து நாட்களாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் மின் உற்பத்திக்கு நாளொன்றுக்கு 22 ஆயிரம் டன் தேவைப்படுகிறது. ஆனால் நேற்று நிலவரப்படி (21-ம் தேதி) 21,335 டன் நிலக்கரி தான் கையிருப்பு இருந்தது. இருந்தபோதும் கூட இருக்கும் நிலக்கரியை முழுவதுமாக பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து சீரான மின் வினியோகத்திற்கு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாஜக தரப்பில் மாநில தலைவர் அண்ணாமலை மலிவான விளம்பரத்துக்காக, மக்கள் மத்தியில் தவறான கருத்தை எடுத்துக் கூறியிருக்கிறார்.
தொடர்புடைய செய்தி: “மின் பற்றாக்குறையை திமுக செயற்கையாக ஏற்படுத்தியுள்ளது” – அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு
image
போதிய நிலக்கரி இல்லாததால் எந்தெந்த மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். குஜராத்தில் கூட சுழற்சி முறையில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
சமீபத்திய செய்தி: விரைவில் ’விஜய் 67’ அறிவிப்பு… அக்டோபரில் படப்பிடிப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.