வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்களை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதில் புதிய நடைமுறை

பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்களை ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதில் புதிய நடைமுறை பின்பற்றப்படுவதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) அறிவித்தார்.

பின்வரிசை உறுப்பினர்கள் வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்கள், பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும்போது தற்போது பின்பற்றப்படுகின்ற முறையியலின் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்படுகின்ற அனைத்து நாட்களிலும் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வினாக்களைக் கேட்பதற்கான வாய்ப்பு கிடைப்பதனால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

இந்த நிலையின் கீழ் பாராளுமன்றத்தில் வினாக்களைச் சமர்ப்பித்துள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்கப்படுவதில்லையெனத் தெரிவித்து அவ்வுறுப்பினர்கள் பாராளுமன்ற சபாமண்டபத்திலும் தனிப்பட்ட முறையிலும்  கௌரவ சபாநாயகரிடம் முன்வைத்த எழுத்துமூல மற்றும் வாய் மூலமான கோரிக்கைகள் அண்மையில் நடத்தப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டங்களில்  விசேட கவனம் செலுத்தப்பட்டது.  இதற்கமைய மே மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு தினம் தொடக்கம் இந்தப் புதிய நடைமுறை செயற்படுத்தப்படும். இதற்கமைய வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்கள் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும்போது கடைப்பிடிக்கப்படும் புதிய நடைமுறை குறித்த சபாநாயகரின் அறிவிப்பு வருமாறு,

அறிவித்தல்

பின்வரிசை உறுப்பினர்கள் வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்கள், பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும்போது தற்போது பின்பற்றப்படுகின்ற முறையியலின் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்படுகின்ற அனைத்து நாட்களிலும் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே வினாக்களைக் கேட்பதற்கான வாய்ப்பு கிடைக்கப்படுவதனால் வினாக்களைச் சமர்ப்பித்துள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்கப்படுவதில்லையெனத் தெரிவித்து அவ்வுறுப்பினர்கள் பாராளுமன்ற சபாமண்டபத்திலும் தனிப்பட்ட முறையிலும்  கௌரவ சபாநாயகரிடம் முன்வைத்த எழுத்துமூல மற்றும் வாய் மூலமான கோரிக்கைகள் மீது 2022.03.16  மற்றும் 2022.04.08 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டங்களில்  விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

அதன்படி வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்களைப் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கும் போது புதிய முறையியலொன்றைப் பின்பற்றுவதற்காக  பின்வரும் வழிகாட்டல்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதை  இவ்வுயரிய சபைக்கு அறிவித்துக்கொள்ள  விரும்புகின்றேன்:-

  1. பாராளுமன்ற அமர்வொன்றில் கேட்கப்படும் வாய்மூல விடைக்கான வினாக்களின் எண்ணிக்கையை 10 வினாக்களுக்கு வரையறுத்தல்;
  1. ஒவ்வோர் உறுப்பினராலும் வினாக்கள் கையளிக்கப்பட்டுள்ள வரிசைமுறைப்படி முதலாம் வினாவுக்கு முன்னுரிமையளித்து பாராளுமன்றத்தின் அமர்வுகள் நடத்தப்படும் முதல் தினத்தில் முதலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பத்து (10) உறுப்பினர்களின் தலா ஒரு வினா வீதம் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படுதல்;
  1. இரண்டாம் தினத்தில் அடுத்ததாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பத்து (10) உறுப்பினர்களின் வினாக்களை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குதல் மற்றும் ஏனைய நாட்களுக்காகவும் மேற்கூறப்பட்ட வகையில் வாய்மூல விடைகளை எதிர்பார்த்து சமர்ப்பிக்கும் வினாக்களை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குதல்;
  1. பதில் வழங்குவதற்காக கால அவகாசம் கோரப்பட்ட வினாக்களைப் பொருத்த மட்டில் சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கப்படும் அமர்வு தினத்தில் அவற்றுக்கு யோக்கியமான முறையில் முன்னுரிமையளிக்கப்படுதல்; மற்றும்
  1. இப்புதிய முறையியலை 2022 மே மாதம் முதலாவது பாராளுமன்ற அமர்வு தினத்திலிருந்து நடைமுறைப்படுத்துதல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.