6 மாதத்தில் 70% வரை லாபம் கிடைக்கலாம்.. அட்டகாசமான 2 பங்குகள் பரிந்துரை..!

அதானி இன்ஸ்டிடியூட் ஆப் டிஜிட்டல் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் மற்றும் ஓரேனா சொல்யூசன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஐடி மாணவர்கள் மற்றும் ஐடி வல்லுனர்களின் திறனை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தமாகியதில் இருந்தே, தேவ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரித்து வருகின்றது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 135 ரூபாயில் இருந்து 175 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 30 சதவீதத்திற்கு மேலாக இப்பங்கின் விலையானது அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இப்பங்கின் விலையானது மேற்கோண்டு அதிகரிக்கலாம் என ஐஐஎஃப்எல் புரோக்கிங் நிறுவனம் கணித்துள்ளது.

2 இன் 1 திட்டம்.. யூலிப் திட்டத்தில் SIP வருமானம் 26%.+ இன்சூரன்ஸ்.. யோசிக்க வேண்டிய திட்டம் தான்!

இலக்கு விலை

இலக்கு விலை

ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் நிறுவனம் இப்பங்கின் இலக்கினை 300 ரூபாய் என்ற லெவலை அடுத்த 6 மாதத்தில் தொடலாம் என கணித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அதன் பங்குதாரர்களுக்கு 70 சதவீதம் வருவாயினை எட்டலாம். இப்பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பங்கு விலை

இன்றைய பங்கு விலை

தேவ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி லிமிடெட் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் 178.05 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது, இதன் இன்றைய உச்ச விலை 182.80 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 174.65 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 182.80 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 42.50 ரூபாயாகும்.

டெக்னிக்கலாக அதிகரிக்கலாம்
 

டெக்னிக்கலாக அதிகரிக்கலாம்

டெக்னிக்கலாக இப்பங்கின் விலையானது 150 ரூபாயினை உடைத்துக் காட்டியுள்ளது. இது இந்த நிறுவனத்தின் முக்கிய லெவலாக பார்க்கப்படுகிறது. ஆக டெக்னிக்கலாகவும் இப்பங்கின் விலையானது அதிகரிக்க சாத்தியம் அதிகம் எனலாம்.

இது அடுத்த 6 மாதங்களில் 250 – 300 ரூபாய் என்ற லெவலை எட்டலாம். இதன் ஸ்டாப் லாஸ் 138 ரூபாய் என்ற லெவலை கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும். இதன் இலக்கு விலை 250 – 300 ரூபாயாகும்.

மாஸ்டெக் இலக்கு

மாஸ்டெக் இலக்கு

இதேபோல ஆனந்த ரதி புரோக்கிங் நிறுவனம், மாஸ்டெக் நிறுவனத்தின் பங்கு விலையானது 2935 – 3400 ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால நோக்கில் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

broking firms sees up to 70% upside in this IT stock in six months

broking firms sees up to 70% upside in this IT stock in six months/6 மாதத்தில் 70% வரை லாபம் கிடைக்கலாம்.. அட்டகாசமான 2 பங்குகள் பரிந்துரை..!

Story first published: Friday, April 22, 2022, 18:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.