நகராட்சி தலைவர் முனிசாமி விருப்பம்!| Dinamalar

தங்கவயல் : ”எதிர் தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு, பேச்சால் பதில் அளிப்பதை காட்டிலும் நான்கு ஆண்டுகளில் தொகுதியில் நடந்த சாதனைகளை விளக்குவதே சிறந்ததென விரும்புகிறோம்,” என்று நகராட்சி தலைவர் முனிசாமி தெரிவித்தார்.காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம், ராபர்ட்சன்பேட்டை நகராட்சி எதிரில் உள்ள ஸ்டேடியத்தில் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் நேற்று நடந்தது.

நகராட்சி தலைவர் முனிசாமி, நகராட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின், நகராட்சி தலைவர் முனிசாமி கூறியதாவது:வாதம், விவாதம் தேவையில்லை. எதிர் தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு பேச்சால் பதில் அளிப்பதை காட்டிலும் நான்கு ஆண்டுகளில் தொகுதியில் நடந்த சாதனைகளை விளக்குவதே சிறந்ததென விரும்புகிறோம். கடந்த 2008 – 2018க்குள் தங்கவயல் தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடக்கவே இல்லை. தற்போதைய தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பணிகள் ஒவ்வொன்றுமே நம் கண் முன்னே நிற்கிறது. இதில் பொய், பித்தலாட்டம் கிடையாது.யாரையுமே தரக்குறைவாக பேசக்கூடாது. குறிப்பாக பெண்களுக்கு காங்கிரஸ் கவுரவம் அளிக்கிறது. ஏட்டிக்கு போட்டி பேச்சுகளை நிறுத்தி நகரின் வளர்ச்சியை செயலில் காட்டுவது தான் எங்களுக்கு பிடிக்கும்.தரமான அரசு மருத்துவமனை, மினி விதான் சவுதா, கட்டடம் சாதனை இல்லையா?நகரம் முழுவதும் சாலைப்பணிகள், நடைபாதைகள், கால்வாய்கள், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க போர்வெல்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

ராஜர்ஸ் கேம்ப் பகுதியில் 30 ஏக்கரில் வீட்டு மனை வழங்கப்படுகிறது. 5,600 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்க தயார். ரூபகலா ஊழல் செய்து சிறைக்கு சென்றவர் அல்ல. நேர்மையானவர்.ஓரியண்டல் வார்டில் ரூபகலா பேசும் போது, கல் எறிந்து கலவரம் செய்தனர். அவர்கள் யாரென்று தெரியும். ஆனாலும் போலீசில் பிடித்து தரவில்லை.மாறாக, அதே ஓரியண்டல் வார்டுகாரரையே நகராட்சி தலைவர் ஆக்கினார். இதுதான் அரசியல் தலைவரின் சவாலாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.