நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் -வணிக நீதிமன்றம் திறப்பு! வழக்கறிஞர் சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்ததப்படுவதாக முதல்வர் அறிவிப்பு…

சென்னை: சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா மற்றும், தமிழகத்தின் முதல் வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை திறந்துவைத்து முதல்வர் ஸ்டாலின்,  வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்ததப்படுவதாக அறிவிப்பினை வெளியிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடவசதி வழங்கும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரூ. 20.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட வுள்ள நீதிமன்றக் கட்டடத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, சென்னை, எழும்பூரில், வணிக சம்பந்தமான வழக்குகளை விசாரிப்ப தற்கென ரூ. 1.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வணிக நீதிமன்றத்திற்கான கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி உள்பட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்ட அமைச்சர் ரகுபதி, நீதிபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஜெயரஞ்சன் எழுதிய Dravidian journey புத்தகத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.

இதன்பின் இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா  சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் நாட்டு மக்களின் மனசாட்சியாகவும் இருக்கிறார் என்று குறிப்பிட்டார். மேலும், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததுடன்,  தமிழ் மொழியை நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கவும் கோரிக்கை வைத்தார். இவ்விரு கோரிக்கைகளையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலிப்பார் என்று நம்புவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சேமநல நிதி உயர்வை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தோற்றால் உயிரிழந்த 480 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.20 கோடி தொகையினை மாநில அரசு விரைவில் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.