பிரித்தானியருக்கு ஆற்றில் கிடைத்த புதையல்… அவர் அதை என்ன செய்திருக்கிறார் பாருங்கள்


காந்தம் மூலம் ஆறுகளுக்குள் புதையல் தேடும் பிரித்தானியக் குடும்பம் ஒன்றிற்கு புதையல் ஒன்று கிடைத்தது.

Nottinghamshireஇல் வாழும் ஜார்ஜ் (George Tindale, 15), தன் தந்தையான கெவின் (Kevin, 52)உடன் Lincolnshireஇலுள்ள Witham ஆற்றில் காந்தத்தின் உதவியுடன் வழக்கம் போல புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஜார்ஜுக்கு பழைய பணப்பெட்டி ஒன்று கிடைத்துள்ளது. தந்தையும் மகனுமாக அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்க, அதற்குள் 2,500 அவுஸ்திரேலிய டொலர்கள்(தோராயமாக 1,400 பவுண்டுகள்) இருந்துள்ளன.

அந்தப் பெட்டிக்குள் சில வங்கி அட்டைகள் முதலான ஆவணங்களும் இருக்க, அந்தப் பெட்டி Lincolnshireஐச் சேர்ந்த ராப் (Rob Everett) என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

உடனே, அந்தப் பெட்டியை அதற்குச் சொந்தமானவரிடம் சேர்த்துவிடலாம் என தன் தந்தையிடம் ஜார்ஜ் கூற, தந்தையும் மகனுமாக ராபைத் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் அவரது பெட்டியை ஒப்படைத்துள்ளார்கள்.

இப்படியும் உலகத்தில் நேர்மையான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என ஆச்சரியத்தில் மூழ்கிப்போன ராப், ஜார்ஜுக்கு ஒரு சிறு தொகையைப் பரிசாக அளித்துள்ளார்.

அத்துடன், ஜார்ஜுக்கு அவர் மற்றொரு பெரிய உதவியும் செய்ய முன்வந்துள்ளார். ஜார்ஜுக்கு இப்போது 15 வயதுதான் ஆகிறது. ஆகவே, அவர் படித்து முடித்ததும் தான் நடத்தி வரும் தனது நிறுவனத்தில் அவரை பணிக்கு சேர்த்துக்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார் ராப்.

தான் அப்படிச் செய்வதால், நன்மை செய்வதற்கும், நேர்மைக்கும் பெரிய பலன் உண்டு என்பதை ஜார்ஜ் தன் வாழ்வில் கற்றுக்கொள்ளும் பெரிய பாடமாக அது இருக்கும் என்கிறார் ராப். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.