‘உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிகளைப் போல பாதிக்கப்படமாட்டீர்கள்…’ காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி வாக்குறுதி

பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் இளைஞர்களிடம், கடந்த காலங்களில் அவர்களுடைய பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி அனுபவித்ததைப் போல அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார். அவர் யூனியன் பிரதேசத்திற்கான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சம்பா மாவட்டத்தின் பல்லி கிராமத்தில் இருந்து பஞ்சாயத்துராஜ் தினம் கொண்டாட்டத்தின்போது நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 லட்சம் கிராமப்புற உள்ளாட்சி உறுப்பினர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “நான் அதை உங்களுக்கு நிரூபிப்பேன், இந்த உத்தரவாதத்தை உங்களுக்கு வழங்க நான் இங்கு வந்துள்ளேன்” என்று கூறினார்.

ஆகஸ்ட், 2019-இல் 370வது பிரிவு திருத்தப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணத்தில், ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சியின் வேகத்தை வெளிப்படுத்தி, சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே பயண நேரத்தை இரண்டு மணிநேரமாக குறைக்கும் பனிஹால்-காசிகுண்ட் சாலை சுரங்கப்பாதை திறப்பு, பல்லியில் 500 கிலோவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம், ராட்டில் மற்றும் குவார் ஹைடல் திட்டங்கள், செனாப், மற்றும் டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா எக்ஸ்பிரஸ்வே திட்டங்கள் உள்ளிட்டவைக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை இதில் அடங்கும்.

ஒரு காலத்தில் ஒரு கோப்பு ஜம்மு காஷ்மீர் சென்றடைய வேண்டுமானால் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும் என்று மோடி கூறினார். “இன்று, பல்லி பஞ்சாயத்தில் 500 கிலோவாஅட் சூரிய சக்தி திட்டம் மூன்றே வாரங்களில் முடிக்கப்பட்டதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் கூறினார். மேலும், கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பசுமை மின்சாரம் கிடைக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ராட்டில் மற்றும் குவார் நீர் மின் திட்டங்கள் நிறைவடைந்தால், மின்சார ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் போதுமானதாக இல்லாமல் வருமானம் ஈட்டும் ஆதாரமாகவும் மாறும் என்று கூறினார்.

சட்டப்பிரிவு 370 திருத்தப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிடுகையில், இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது என்றும், 30,000 க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் ஆட்சி தொடர்பான விவகாரங்களை நடத்தி வருவதாகவும் கூறினார். “முதல் முறையாக, அமைதியான மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்று இந்த மக்கள் தங்கள் கனவுகளை நனவாக்குகிறார்கள்.” என்று பிரதமர் மோடி கூறினார்.

மக்களிடையே இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். “ஒரே இந்தியா மற்றும் சிறந்த இந்தியா என்று நான் பேசும்போது, இணைப்பில் கவனம் செலுத்துவது மற்றும் இடைவெளியை நீக்குவது. இதயங்கள், மொழிகள், பழக்கவழக்கங்கள் அல்லது வளங்களின் தூரங்கள், அவற்றை நீக்குவதே இன்று நமது மிகப் பெரிய முன்னுரிமை” என்று பிரதமர் மோடி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.