சென்னையில், போதை மாத்திரைகள் விற்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது.!

சென்னையில் போதை மாத்திரைகளை விற்று வந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரவாயலில் இளைஞர்கள் போதை மாத்திரைகள் விற்று வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்று வந்த கிஷோர் குமார் மற்றும் குகனை கையும் களவுமாக கைது செய்தனர்.

மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து கொண்டே சக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.