காலை 6 மணிக்கு எழுவார்; கணிதம் பயில்வார்… உலகின் மிக வயதான நபர் தனகா 119 வயதில் மரணம்!

உலக அளவில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களில் சுமார் 28 சதவிகிதம் பேர் ஜப்பானில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் வசித்து வந்த பாட்டி கேன் தனகா (Kane Tanaka) உலகின் மிகவும் வயதானவர் என்ற சாதனையை படைத்தவர். தற்போது தன்னுடைய 119 வயதில் காலமாகி உள்ளார். நர்சிங் ஹோமில் வசித்து வந்த இவர், சமீப காலம் வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இவரது மரணம் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

Kane Tanaka

தனகா ஜனவரி 2, 1903-ல் ஜப்பானின் தென்மேற்கு ஃபுகுவோகா பகுதியில் பிறந்தார். தனது இளமை பருவத்தில், நூடுல்ஸ் கடை மற்றும் அரிசி கேக் கடை உட்பட பல்வேறு வணிகங்களை நடத்தி வந்தார். 1922-ல் ஹிடியோவை மணந்தார். நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த இந்தத் தம்பதி, ஐந்தாவதாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்டனர்.

2019-ம் ஆண்டு, உயிருடன் இருக்கும் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகம் தனகாவை அங்கீகரித்தது. அந்த வயதிலும், தினசரி காலை 6:00 மணிக்கே எழுந்து, மதியம் கணிதம் மற்றும் கையெழுத்துப் பயிற்சி செய்வதை வழக்கமாக தனகா கொண்டிருந்ததாக கின்னஸ் அமைப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Rest in Peace பாட்டி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.