விக்ரம் படத்தின் முக்கிய அப்டேட்.. ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விஸ்வரூபம் 2. இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பின் கமலின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக
கமல்
ரசிகர்கள் உலகநாயகனை திரையில் காணாமல் ஏங்கியுள்ளனர். இந்நிலையில்
லோகேஷ்
கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து முடித்துள்ள
விக்ரம்
படத்தின் மீது தான் தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பார்வையும் உள்ளது.

அதிரடியாக முடிவெடுக்கும் அஜித்..!ஒர்க் அவுட் ஆகுமா ?

மாஸ்டர்
படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கிவரும் இப்படத்தில் கமலுடன்
விஜய் சேதுபதி
மற்றும் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளனர்.
அனிருத்
இசையமைத்துள்ள இப்படம் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

சமீபத்தில் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மெகாஹிட் படங்கள் அமையாவில்லை. மேலும் மற்ற மொழி படங்களான புஷ்பா, RRR, KGF ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எனவே இந்த குறையை கமலின் விக்ரம் படம் போக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது CANNES FILM FESTIVAL இல் விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் லோகேஷும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த அறிவிப்பு கமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை உதயநிதி பேச்சு; பாராட்டிய லிங்குசாமி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.