விலை உயருது டிவி, சாக்லெட் | Dinamalar

புதுடில்லி : ‘டிவி’, சாக்லெட் உட்பட 143 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக மாநில அரசுகளிடம் ஜி.எஸ்.டி., கவுன்சில் கருத்து கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பவர் பேங்க், வாட்ச், சூட்கேஸ், 32 இன்ச் வரையிலான ‘டிவி’, சாக்லெட், ேஹண்ட்பேக், வாசனை திரவியம், வால்நெட், சுயிங்கம், அப்பளம், வெல்லம், வாஷ் பேசின், குளிர்பானம், தோல் பொருட்கள், கண்ணாடி உட்பட 143 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 92 சதவீத பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.,யை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விலை உயர வாய்ப்புள்ளது. இதுவரை வரிவிலக்கில் இருந்த அப்பளம், வெல்லம் போன்றவை 5 சதவீத வரிவிதிப்புக்குள் வர உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.