கண்ண மூடிட்டு வாங்கலாம் – மிரட்டும் அம்சங்களுடன் வெளியான மோட்டோ ஜி52!

மோட்டோ எனும் பெயருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதற்கு தகுந்தாற்போல
மோட்டோரோலா
நிறுவனமும், புதிய ஸ்மார்ட்போன்களை அதிக வசதியுடன், குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள
மோட்டோ ஜி52
ஸ்மார்ட்போனும் இதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

புதிய pOLED பேனல், 90Hz ரெப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், டால்பி அட்மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், NFC என மோட்டோரோலாவின் ஜி52 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலையோ ரூ.14,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி52 அம்சங்கள் (Moto G52 Specifications)

மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போனில் 6.5″ அங்குல 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட pOLED பஞ்ச் ஹோல் டாட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ரேஞ் ஸ்மார்ட்போனில் pOLED டிஸ்ப்ளே இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி ஆதரவு வரை ஜி52 ஸ்மார்ட்போன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm ஸ்னாப்டிராகன் 680 புராசஸர் நிறுவப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் எஞ்சினும் இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. புராசஸர் பழையது என்றாலும், விலைக்கேற்ற தரத்துடன் ஸ்மார்ட்போன் இருக்கும்.

பில் கேட்ஸை சீண்டிய எலான் மஸ்க் – வைரலாகும் புகைப்படம்!

மோட்டோ ஜி52 கேமரா (Moto G52 Camera)

பேஸ் பியூட்டி போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செயலி உள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16MP மெகாபிக்சல் f/2.4 கேமரா டிஸ்ப்ளே டாட் நாட்சில் பொருத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலை மோட்டோ ஜி52 போனில் டிரிப்பிள் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முதன்மை சென்சாராக 50MP மெகாபிக்சல் கேமரா, உடன் 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.

மோட்டோ ஜி52 பேட்டரி (Moto G52 Battery)

சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, அக்செலெரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப் ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இந்த போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

டைப்-சி போர்ட், ப்ளூடூத் 5.1, 3.5mm ஆடியோ ஜாக், NFC போன்ற இணைப்பு ஆதரவுடன் மோட்டோ ஜி52 போன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. இதனை ஊக்குவிக்க 30W பாஸ்ட் சார்ஜர் போனுடன் வழங்கப்படுகிறது.

அந்த மாதிரி படங்களை மறைக்கும் ஆப்பிள்!

மோட்டோ ஜி52 விலை (Moto G52 Price in India)

புதிய மோட்டோ போன், சார்கோல் கிரே, பீங்கான் வெள்ளை ஆகிய இரு வண்னத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வேரியன்டின் விலை ரூ.14,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 6ஜிபி + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,499 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.

மே 3, 2022 அன்று பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தின் வாயிலாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. Flipkart Axis Bank Card வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5% விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10% விழுக்காடு வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

லிங்கை க்ளிக் செய்து சர்வேயில் கலந்துக்கோங்க… கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.