செம ஹேப்பி.. கிட்டதட்ட 700 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. அனைத்து துறைகளிலும் லாபமே!

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில், இது குறைந்த விலையில் பங்குகளை வாங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை வெளியாகவிருக்கிறது. இதுவும் சந்தையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடு செய்ய இதுதான் சரியான வாய்ப்பு.. முத்தான 3 பங்குகளை பரிந்துரை செய்த நிபுணர்கள்..!

இதற்கிடையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க சந்தையானது கடந்த அமர்வில் ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்திலேயே காணப்பட்டன. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது. எனினும் பரவி வரும் கொரோனா, பணவீக்கம், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை என்பது கவனிக்கதக்க விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகின்றன.

 அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

கடந்த ஏப்ரல் 25 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 3302.85 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1870.45 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்எஸ்இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன.

 ரூபாய் நிலவரம்

ரூபாய் நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 23 பைசா அதிகரித்து, 76.46 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 76.69 ரூபாயாக வீழ்ச்சி கண்டு முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 தொடக்கம் எப்படி?
 

தொடக்கம் எப்படி?

இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 547.71 புள்ளிகள் அதிகரித்து, 57,127.60 புள்ளிகளாகவும், நிஃப்டி 50.50 புள்ளிகள் அதிகரித்து, 17,004.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 534.23 புள்ளிகள் அதிகரித்து, 57,114.12 புள்ளிகளாகவும், நிஃப்டி 168.30 புள்ளிகள் அதிகரித்து, 17,122.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1739 பங்குகள் ஏற்றத்திலும், 322 பங்குகள் சரிவிலும், 60 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

 கவனிக்க வேண்டிய பங்குகள்

கவனிக்க வேண்டிய பங்குகள்

இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் யெஸ் வங்கி, வரும் பேவரேஜஸ், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விஏ டெக், எவரெடி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ், ரிலீகேர் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளன.

 இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி,பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்,எம்.சி.ஜி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும், மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.

 நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, இந்தஸ்இந்த் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ டாப் லூசராகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, எம் & எம், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது, தற்போது 9.44 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 684.82 புள்ளிகள் அதிகரித்து, 57,264.71 புள்ளிகளாகவும், நிஃப்டி 207.1 புள்ளிகள் அதிகரித்து, 17,161.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

opening bell: sensex gains nearly 700 points, nifty trade below 17,200, all sectors in green

opening bell: sensex gains nearly 700 points, nifty trade below 17,200, all sectors in green/செம ஹேப்பி.. கிட்டதட்ட 700 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. அனைத்து துறைகளிலும் லாபமே!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.