பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி: பேரறிவாளன் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி

டெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பரிந்துரையும் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி கொண்டிருப்பது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வியை முன்வைத்துள்ளனர். பரிந்துரைகள் அனைத்தையும் ஜனாதிபதி பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்புவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மோசமான முன் உதாரணம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். பேரறிவாளன் விவகாரத்தில் எந்த அடிப்படையில் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆவணங்களை அனுப்பி உள்ளார் என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. ஆளுநர் முடிவு எடுக்கும் அதிகாரம் பற்றி ஒவ்வொரு கோப்பையும் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் எடுக்க கூடிய ஒவ்வொரு முடிவையும் ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. பேரறிவாளனை யார் விடுவிப்பது என்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் அவர் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பதாக பேரறிவாளன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றமே தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு இந்த கேள்விகளை முன்வைத்தனர். பேரறிவாளன் விவகாரத்தில் குடியரசுத் தலைவர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் ஒன்றிய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது என உச்ச்சநீதிமன்றம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.