126 பில்லியன் டாலர் நஷ்டம்.. டெஸ்லா முதலீட்டாளர்களை கதறவிட்ட எலான் மஸ்க்..!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் கடும் போராட்டத்திற்குப் பின்பு டிவிட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்ற இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் எந்த விஷயத்திலும் தொடர்பு இல்லாத டெஸ்லா பங்குகள் கடுமையான சரிவை எட்டி முதலீட்டாளர்களுக்கும் பெரும் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. ஏன் தெரியுமா..?

ரூ.17 டூ ரூ.185.. மல்டிபேக்கர் வாய்ப்பினை கொடுத்த ஜுவல்லரி பங்கு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவது டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் உட்பட பல மூத்த ஊழியர்களும், நிர்வாக குழு உறுப்பினர்களும் கடும் சோகத்திலும், வெறுப்பிலும் உள்ளனர். இதன் வெளிப்பாடாக பராக் அகர்வால் டிவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.

டெஸ்லா பங்குகள்

டெஸ்லா பங்குகள்

செவ்வாயன்று டெஸ்லா நிறுவனப் பங்குகள் சுமார் 12.18 சதவீதம் சரிந்த காரணத்தால் இதன் சந்தை மதிப்பை 126 பில்லியன் டாலர் சரிந்து தற்போது 905 பில்லியன் டாலராக உள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற 44 பில்லியன் டாவர் தொகையைத் திரட்ட வேண்டும்.

21 பில்லியன் டாலர்
 

21 பில்லியன் டாலர்

இதில் எலான் மஸ்க் தனது பங்கு பணமான 21 பில்லியன் டாலரை திரட்ட அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இதன் வாயிலாக எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் இருக்கும் டெஸ்லா பங்குகளில் குறைந்தது 20 சதவீதம் விற்பனை செய்ய வேண்டிய நிலை வரும். இது கட்டாயம் டெஸ்லா நிறுவனத்தில் மஸ்க்-ன் ஆதிக்கத்தைக் குறைக்கும்.

126 பில்லியன் டாலர் நஷ்டம்

126 பில்லியன் டாலர் நஷ்டம்

இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெஸ்லா பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்தனர். இதனால் டெஸ்லா பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 12.18 சதவீதம் சரிந்து 876.42 டாலராக சரிந்து 126 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.

டிவிட்டர்

டிவிட்டர்

எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதாக அறிவிக்கப்பட்ட பின்பு சில பிரபலமான டிவிட்டர் கணக்குகளின் பாலோவர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதேபோல் சில கணக்குகளைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதிய வாடிக்கையாளர்கள்

புதிய வாடிக்கையாளர்கள்

இதேபோல் எலான் மஸ்க் – டிவிட்டர் டீல் அறிவிப்புக்குப் பின்பு புதிதாக டிவிட்டர் கணக்குகளைத் திறந்தோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

ஸ்பேம் கொள்கை

ஸ்பேம் கொள்கை

எங்கள் ஸ்பேம் கொள்கையை மீறும் கணக்குகள் மீது நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்போது, பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பாதிக்கும். ​இந்த ஏற்ற இறக்கங்கள் பெரும்பாலும் புதிய கணக்கு உருவாக்கம் மற்றும் ஸ்பாம் கணக்குகள் செயலிழக்கச் செய்வதன் விளைவாகத் தோன்றுகின்றன என்று டிவிட்டர் விளக்கம் கொடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tesla lost $126 billion Mcap in single day; Elon musk Twitter deal impacts massively

Tesla lost $126 billion Mcap in single day; Elon musk Twitter deal impacts massively 126 பில்லியன் டாலர் நஷ்டம்.. டெஸ்லா முதலீட்டாளர்களை கதறவிட்ட எலான் மஸ்க்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.