Thanjavur Temple News Live Updates: விபத்தில் சிக்கியது தேர் அல்ல சப்பரம்.. அரசுக்கு எந்த அறிவிப்பும் தெரிவிக்காமல் விழா நடைபெற்றுள்ளது- அமைச்சர் சேகர் பாபு!

 contact with a high voltage electric wire during a chariot procession in Thanjavur district தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது.

அதிகாலை 3 மணியளவில் தேரினை மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது

இந்நிலையில், மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

தேரினை இழுத்து வரும் போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்படதாக கூறப்படுகிறது.

மேலும், களிமேட்டில் தேர் விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Live Updates
12:15 (IST) 27 Apr 2022
அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!

திருவிழாக் காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

12:05 (IST) 27 Apr 2022
தஞ்சை தேர் விபத்து.. அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!

சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

11:48 (IST) 27 Apr 2022
தஞ்சாவூர் தேர் விபத்து.. அமித் ஷா இரங்கல்!

தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தோர் குறித்து அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” -உள்துறை அமைச்சர் அமித் ஷா

11:24 (IST) 27 Apr 2022
தஞ்சை தேர் விபத்து.. அதிமுக ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிவாரணம், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 15 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிவாரணம் அளித்து, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

10:54 (IST) 27 Apr 2022
தேர் விபத்து – தஞ்சை புறப்பட்டார் முதல்வர்

தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற தஞ்சை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சை செல்ல உள்ளார்!

10:44 (IST) 27 Apr 2022
தஞ்சை தேர் விபத்து : தமிழ்நாடு ஆளுநர் இரங்கல்

தஞ்சாவூர் தேர் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட விபத்து வேதனையளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என தமிழ்நாடு ஆளுநர் ஆன் என் ரவி தெரிவித்துள்ளார்.

10:32 (IST) 27 Apr 2022
தஞ்சை தேர் விபத்து – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

களிமேடு தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெருந்துயரத்தைத் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கூடுகைகளில் விழா ஏற்பாட்டாளர்களுடன் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, உள்ளூர் நிர்வாகம் ஆகியோர் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாதுகாப்பான விழாக்களுக்கான நெறிமுறைகள் உறுதியாக கடைப்பிடிக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

10:13 (IST) 27 Apr 2022
தஞ்சை தேர் விபத்து – திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்

தஞ்சை களிமேடு பகுதி தேர் திருவிழாவில் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்ட போது மின்சாரம் தாக்கிய கொடூர விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது பெருந்துயரம். உறவினர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

10:08 (IST) 27 Apr 2022
தஞ்சை தேர் விபத்து: சட்டப்பேரவையில் முதல்வர் இரங்கல்

தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்ததற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

09:54 (IST) 27 Apr 2022
தஞ்சை தேர் விபத்து : குடியரசுத் தலைவர் இரங்கல்

11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருஞ்சோகம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

09:54 (IST) 27 Apr 2022
மேலும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடம் – மா.சுப்பிரமணியன் தகவல்

தஞ்சை தேர் விபத்து குறித்து தகவல் தெரிந்தவுடன் துரித நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது.தேர் விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

09:42 (IST) 27 Apr 2022
தஞ்சை தேர்பவனி விபத்து – பிரதமர் மோடி நிவாரணம்

தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல். மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என ட்வீட் செய்துள்ளார். தேர்பவனி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

09:02 (IST) 27 Apr 2022
தேர் விபத்து மிகவும் மனவேதனை அளிக்கிறது – எல்.முருகன் இரங்கல்

தஞ்சை களிமேடு அப்பர் கோயில் தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

08:55 (IST) 27 Apr 2022
தஞ்சை தேர் விபத்து – அண்ணாமலை இரங்கல்

தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன். 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்

08:28 (IST) 27 Apr 2022
தேர் திருவிழாவில் விபத்து : ஐ.ஜி. நேரில் விசாரணை

தேர் திருவிழா விபத்து நடந்த இடத்தில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் விசாரணை. முன்னதாக ஆட்சியர் தினேஷ் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த நிலையில், ஐ.ஜியும் ஆய்வு மேற்கொள்கிறார்.

08:20 (IST) 27 Apr 2022
துயர செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்- முதல்வர்

தேர்பவனி விபத்தில் 11 பேர் உயிரிழந்த துயர செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். தஞ்சை தேர்பவனியில் காயமடைந்துள்ள 15 பேருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

08:17 (IST) 27 Apr 2022
தேர் விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ5 லட்சம் நிவாரணம்

தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

08:15 (IST) 27 Apr 2022
தேர் திருவிழாவில் விபத்து : தஞ்சை செல்கிறார் முதல்வர்

தேர் விபத்து நடந்த தஞ்சை களிமேடு பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார்.

08:10 (IST) 27 Apr 2022
தஞ்சை தேர் விபத்து: உயிரிழந்தவர்கள் விவரம்

மோகன்(22), பிரதாப் (36), ராகவன் (24), அன்பழகன் (60), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சுவாமிநாதன் (56), கோவிந்தராஜ் (45), பரணிதரன் (13)

08:00 (IST) 27 Apr 2022
தேர் திருவிழாவில் விபத்து நிகழ்ந்தது எப்படி?

தேரை வளைவில் திருப்பும்போது தேருடன் இருந்த ஜெனரேட்டர் சிக்கியுள்ளது. ஜெனரேட்டரை சரிசெய்யும்போது தேரின் உச்சி அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டதாக தஞ்சா மாவட்ட தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா தகவல்

07:58 (IST) 27 Apr 2022
தஞ்சாவூர் செல்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 9 மணிக்கு விமானம் மூலம் தஞ்சாவூர் செல்கிறார். களிமேடு தேர்பவனியில் விபத்து நிகழ்ந்த நிலையில் அமைச்சர் தஞ்சை விரைகிறார்

07:56 (IST) 27 Apr 2022
தேர்பவனி விபத்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு

தஞ்சை களிமேடு தேர்பவனி விபத்து குறித்து சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு கொண்டுவர உள்ளோம் என திருவையாறு எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.