எரிபொருள் மீதான மாநில வரியை குறைக்க மோடி கோரிக்கை… சொல்வது எளிது செய்வது கடினம்… ஏன்?

2021 நவம்பரில் எரிபொருட்களின் விலை உயர தொடங்கிய சமயத்தில், மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இது, பல மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வழிவகுத்தது. ஆனால், கலால் மற்றும் வாட் வரி குறைப்பால் மக்களுக்கு கிடைத்த நிவாரணம், கடந்த 16 நாளில் 14 முறை உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையால் முடிவுக்கு வந்தது.

எரிபொருளின் மீதான கலால் மற்றும் வாட் வரி, மாநிலம் மற்றும் மத்திய அரசுகளுக்கான முக்கிய வருவாய் ஆதாராம் ஆகும். எரிபொருளின் மீதான கலால் வரி, மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 18.4 சதவீதம் ஆகும்.

பெட்ரோலியம் மற்றும் ஆல்கஹால், சராசரியாக மாநிலங்களின் சொந்த வரி வருவாயில் 25-35 சதவிகிதம் கொண்டிருக்கிறது மாநிலங்களின் மொத்த வருவாய் வரவுகளில், மத்திய வரி பரிமாற்றங்கள் 25-29 சதவிகிதம் ஆகும், அதே நேரத்தில் சொந்த வரி வருவாய் 45-50 சதவிகிதம் ஆகும்.

கடந்தாண்டு நவம்பரில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 மற்றும் ரூ.10 என குறைத்த மத்திய அரசின் நடவடிக்கையைத் தொடர்ந்து, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (சட்டமன்றத்துடன்) பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.1.80-10 என்ற அளவிலும், டீசல் மீதான வாட் வரியை ரூ 2 முதல் 7 என்கிற கணக்கிலும் குறைத்தன.

வாட் குறைப்பு காரணமாக மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு GDP-யில் 0.08 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல்-டிசம்பர் 2021 இல், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள் மூலம் மத்திய கருவூலத்திற்கு ரூ. 3.10 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இதில் கலால் வரி ரூ. 2.63 லட்சம் கோடியும், கச்சா எண்ணெய் மீதான செஸ் வரி மூலம் ரூ. 11,661 கோடியும் கிடைத்துள்ளது.

அதே காலகட்டத்தில், மாநிலங்களின் கருவூலத்தில் ரூ.2.07 லட்சம் கோடி திரட்டப்பட்டது.அதில் ரூ.1.89 லட்சம் கோடி VAT மூலமாகவும், மீதமுள்ளவை கச்சா எண்ணெய் மற்றும் நுழைவு வரியின் ராயல்டி மூலமாகவும் கிடைத்துள்ளது.

இரண்டையும் ஒப்பிடுகையில், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மீதான வரி என சுமார் 4.19 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. ஆனால், மாநில அரசுக்கு ரூ2.17 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

2020-21 ஆம் ஆண்டில், பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து கிடைத்த மொத்த மத்திய கலால் வரி ரூ.3.72 லட்சம் கோடி ஆகும். ஆனால், 2021 நிதியாண்டில் மத்திய கலால் வரியின் கீழ் வசூலிக்கப்பட்ட கார்பஸில் இருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வரித் தொகை ரூ.19,972 கோடி ஆகும்.

137 நாட்களுக்கு பிறகு, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) கடந்த மாதம் முதல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

மத்திய அரசு கலால் வரி குறைப்பை அறிவித்த நவம்பர் 4 முதல் பெட்ரோல், டீசல் இரண்டின் விலையையும் எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் மாற்றியமைத்தன. இந்தாண்டு மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநில தேர்தல்கள் முடியும் வரை விலையில் மாற்றங்கள் இன்றி தொடர்ந்தது.

OMC-கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 12 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும் உயர்த்தியுள்ளன. 15 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 949.5 ரூபாயாகவும், வர்த்தக ரீதியிலான 19 கிலோ சிலிண்டர்களின் விலை 250 ரூபாய் உயர்த்தப்பட்டு 2,253 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் பேரலுக்கு 22.6 டாலர் அதிகரித்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.

நவம்பரில் மத்திய அரசு கலால் வரியை குறைத்ததும், 19 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்கள் எரிபொருளின் மீதான வாட் வரியைக் குறைத்தன.

குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட பாஜக தலைமையிலான 17 மாநிலங்களும் ஒரே நாளில் வரிகளைக் குறைத்தன. ஒடிசா, பஞ்சாப் மாநிலங்கள் கலால் வரி குறைக்கப்பட்ட ஒரு வாரத்தில் குறைப்பை அறிவித்தன. டிசம்பரில் வாட் வரியை குறைப்பதாக டெல்லி அறிவித்தது.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை என்று புதன்கிழமை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உலக நெருக்கடியான இந்நேரத்தில் அனைத்து மாநிலங்களும் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி ஒரு குழுவாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.