குரோம்பேட்டை – திருநீர்மலை மற்றும் நெல்லை – தென்காசி சாலை குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்…

சென்னை: குரோம்பேட்டை – திருநீர்மலை மற்றும் நெல்லை – தென்காசிசாலை குறித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்ளுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் 2022-23ஆம் ஆண்டிற்கான வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது சாலைப் பணிகள் குறித்து பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் கூறினார்.

‘நெல்லை – தென்காசி 4 வழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்காசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

குரோம்பேட்டை – திருநீர்மலை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற பரிசீலிக்கப்படும். ஓமலூர் இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாலங்களை, மேம்பட்ட பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி – ஒகேனக்கல் சாலையை ஆராய்ந்து முதல்வர் அனுமதியோடு விரிவுபடுத்த இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் ஓசூர் – தனி சாலையை விரிவுபடுத்தும் பணி இந்த ஆண்டே முடிக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.