சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் மே 1-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே மலை ஏறி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். அனுமதி நாட்களில் மழை பெய்தால் மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.

இதையும் படிக்கலாம்…
‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ வார்த்தைகளை கொண்டு உருவான மகா மந்திரம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.