Russia Ukraine News: ட்ரோன் பயன்படுத்த வேண்டாம் – DJI நிறுவனம் போட்ட தடை!

ட்ரோன்
நிறுவனமான
DJI
டெக்னாலஜிஸ்,
ரஷ்யா உக்ரைன் போர்
காரணமான, நாட்டில் தங்கள் தயாரிப்புகள் போரில் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தற்காலிகமாக வணிகத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

முன்னதாக உக்ரைன் அதிகாரிகளும், பொதுமக்களும் சீனாவின் ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான DJI உள்நாட்டு மக்களின் தரவுகள், ராணுவ தளவாடங்கள் குறித்த தகவல்களை ரஷ்யாவிற்கு கசியவிட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளனர். உலகின் மிகப்பெரும் ட்ரோன் தயாரிப்பு நிறுவனமே, இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது ஆபத்தானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, ரஷ்யாவிலிருந்து பல மேற்கத்திய நிறுவனங்கள் வணிகத்தை நிறுத்திவிட்டு வெளியேறியது. சீன நிறுவனங்கள் பெய்ஜிங்கின் நிலைப்பாட்டிற்கு இணங்கி நாட்டை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கியுள்ளனர்.

இனி சுதந்திரமாகப் பேசலாம் – ட்விட்டர் கடந்து வந்த பாதை!

டி ஜே ஐ அறிக்கை

இதனிடையில் DJI நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ரஷ்யா உக்ரைன் வணிகத்தை நிறுத்தியது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் எந்த நாட்டை குறித்தும் குறைகூற அறிக்கை வெளியிடவில்லை என்றும் தங்கள் நிறுவனத்தின் கொள்கைகளை குறித்து விளக்கும் வகையிலான அறிக்கை இது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “DJI நிறுவனத்தின் ட்ரோன்கள் நல்ல காரியங்களுக்காக மட்டுமே பயன்படுத்தவடுதை நாங்கள் விரும்புகிறோம். எங்கள் ட்ரோன்கள் மூலம் நிகழ்த்தப்படும், எந்தவொரு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளையும் நாங்கள் வெறுக்கிறோம்”

“யாரும் போரில் எங்கள் ட்ரோன்களை பயன்படுத்தவில்லை என்ற உறுதிபடுத்தப்பட்ட தகவல் வரும் வரை, DJI ட்ரோன்கள் இரு நாடுகளிலும் விற்கப்படாது. இந்த தடை என்பது தற்காலிகமானது தான். போர் நிறுத்தம் வந்தால், உடனடியாக எங்கள் சேவையைத் தொடங்குவோம்”

“இணையத்தில் வெளியான ஒரு காணொலியில் ரஷ்ய படைகள் DJI ட்ரோனை பயன்படுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது உறுதி செய்யப்பட்டாலும், எங்கள் கையில் எந்த சாட்டையும் இல்லை சுழற்றுவதற்கு. ஆம், விற்கப்படும் ட்ரோன்களை DJI கட்டுப்படுத்த முடியாது. இதனால் தான் விற்பனையை நிறுத்தி உள்ளோம்”

பில் கேட்ஸை சீண்டிய எலான் மஸ்க் – வைரலாகும் புகைப்படம்!

சிக்கலில் சீனா

DJI நிறுவனமானது தனது நிதித் தகவலை தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும். அதை இதுவரை வெளிப்படையாக வெளியிடவில்லை. ஆனால் ஆய்வு நிறுவனமான Drone Analyst-இன் 2020 தரவுகளின்படி, நிறுவனம் வன்பொருள் உபகரணங்கள் மூலம் $2.9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியதாக மதிப்பிட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைன் மோதன் சீன நிறுவனங்களை சிக்கலில் தள்ளியுள்ளது. ரஷ்யாவில் தொடர்ந்து சீன நிறுவனங்கள் செயல்படுவது, சர்வதேச விமர்சனங்களை ஈர்த்து வருகிறது. ஆனால், சீன நிறுவனங்கள் பின்வாங்கினால், உள்நாட்டில் உள்ள மக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும் என்பதால், சீனா மெளனம் சாதித்து வருகிறது.

தொலைத்தொடர்பு உபகரண தயாரிப்பு நிறுவனமான
Huawei
Technologies ரஷ்யாவில் தங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ரஷ்யாவுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை ஹூவாய் நிறுவனம் செய்து தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.