Samantha: நண்பர்களுக்கு யசோதா; ரசிகர்களுக்கு khatija; சென்னை கல்லூரி மாணவி டு ஹீரோயின் வரையான பயணம்!

சிலரை காரணமே இல்லாமல் பலருக்கும் பிடிக்கும். அப்படியான ஒருவர்தான் சமந்தா. அவர் எந்த ரோலில் வேண்டுமானாலும் வரட்டும், அவர் ஸ்க்ரீன்ல வந்தா போதும் சார்ன்னு சொல்கிற ரசிகர்கள் அவருக்கு உண்டு.

சமந்தாவின் பிறந்தநாள் இன்று. அவர் அப்பா தெலுங்கு. அம்மா மலையாளம். ஆனால் சமந்தா வளர்ந்தது எல்லாம் நம்ம சென்னையில்தான்.

தன்னை தமிழ்ப் பெண் என சொல்லிக் கொள்ளவே விருப்பப்படும் சமந்தாவை தெலுங்கு ரசிகர்கள் ‘ஜெஸ்ஸி’ ஆகவே பார்க்கிறார்கள். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்சனில் ‘ஜெர்ஸி’ சமந்தா தான்.

வணிகவியல் படித்த சமந்தாவுக்கு கல்லூரி படிக்கும் காலத்திலேயே மாடலிங் வாய்ப்புகள் வரத் தொடங்கின. அவர் தமிழில் அறிமுகமாகியது `பாணா காத்தாடி’. ஆனால் அதற்கும் முன்பே மாஸ்கோவின் காவிரியில் நடித்திருந்தார்.

2010-ல் மகேஷ் பாபுவுடன் நடித்த Dookudu படம் ஆல்-டைம் ஹிட் அடிக்கவே லைம் லைட்டுக்கு வந்தவர் 12 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு சினிமாக்களில் கோலோச்சி கொண்டிருக்கிறார்.

சமந்தாவை நண்பர்கள் யசோதான்னு கூப்பிட்டா அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். சமந்தா foodie- ஆம். ஆனால் எவ்வளவு சாப்பிட்டாலும் பிட்னஸ் என வரும்போது ஸ்ட்ரிக்ட் ஆபிசர்.

நோய்வாய்ப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக Pratyusha Support என்ற அமைப்பின் பேரில் சமூக சேவையையும் செய்து வருகிறார்.

சமந்தாவுக்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பது பிடிக்கும். இரண்டு நாய்க்குட்டிகள் அவரிடம் உண்டு. வெளியூர் சூட்டிங் போகும் போது அவற்றை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன் என்பாராம் சமந்தா.

ஹீரோவை மையப்படுத்திய படங்களில் நடித்த சமந்தா, ஹீரோயினை மையப்படுத்திய படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். U-Turn, Oh Baby இப்படியான படங்கள் ஹிட்டடித்தன.

பர்சனல் வாழ்க்கையிலும் நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்திருக்கிறார் சமந்தா. 2013 டையபட்டிஸ் நோயிலிருந்து மீண்டார். சமந்தா -நாக சைதன்யா விவாகரத்து சமூக வலைதளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்ட செய்தியானது.

கொஞ்ச நாட்களாக நடிக்காதிருந்த சமந்தா, புஷ்பா படத்தில் வரும் ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு நடனமாடினார். அவரது கிரேஸ் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதற்கு அந்த பாடலின் வெற்றி உதாரணம்.

அழகு, திறமை, புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் தாண்டி சமந்தாவின் துணிவு தான் அவரை நிலை நிறுத்துகிறது. அவரது பிறந்தநாளிலேயே ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் ரீலிஸ் ஆகிறது. சந்தோசமாக இருங்க, சமந்தா. ஹாப்பி பர்த்டே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.