பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு அடுத்த மாதம் நிவாரணம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சமூக நல நிவாரண முறையொன்று அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று (29) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,இதற்காக அவசர தேவைகள் உலக வங்கி நிதியுதவியின் கீழ் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

“எமது சமீபத்திய விஜயத்தின் போது உலகவங்கியுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உடன்பட்டுள்ளனர்.. வறிய மற்றும் ஏதோ ஒருவகையில் குறைந்த வருமானத்தைக்கொண்டவர்களுக்கு நிவாரணத்தை விரைவில் வழங்கும் வகையில் இதற்கான திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் அடுத்தமாதம் முதல் நடை முறைப்படுத்தப்படும். சர்வதேச நாணய நிதியம் உலக வங்க போன்றவை இவ்வாறான நெருக்கடி நிலைமையின் போது நிபந்தனை ரீதியில் இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் பொது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக எரிபொருள் விலையை அதிகரித்தால் அது அனைத்து பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வறிய மக்களுக்கான இந்த நிவாரணத்திட்டத்திற்கு நிதி அமைச்சு ஊடாக அதற்கான நிதி வழங்கப்படும். இதனை முன்னெடுப்பது மத்திய வங்கியின் பணியல்ல என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.