ஓய்வுபெறும் இந்திய இராணுவ பதவி நிலை பிரதானிக்கு இராணுவ தளபதி வாழ்த்து

இலங்கை இராணுவத்திற்கு இராணுவப் பயிற்சி வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நன்கொடைகளை வழங்குதல், கொள்கை ரீதியான மேம்பாடுகள், இராணுவத்தின் நிபுணத்துவ பரிமாற்ற திட்டங்கள், பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சிகள், ஆகியவற்றுக்காகவும் பாரம்பரிய நட்புறவுகளுக்கு அப்பால் சென்று தனிப்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் இலங்கைக்கான மருத்துவ உதவிகள் என்பவற்றை இரு நாட்டு இராணுவங்களும் தானும் என்றும் மறவோம் என் குறிப்பிடப்பட்ட, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வாழ்த்துக் கடிதம் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் இந்திய இராணுவ பதவிநிலை பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே பீவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் எஸ்எம் வீஎஸ்எம் ஏடீசி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே பீவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் எஸ்எம் வீஎஸ்எம் ஏடீசி அவர்கள் தனது 62 வது வயதில் 42 வருடங்களுக்கும் மேலான இராணுவ சேவையை பூர்த்தி செய்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை (30) ஓய்வுபெற்றார். இலங்கை இராணுவத்தின் உண்மையுள்ள நண்பராக விளங்கிய ஜெனரல் நரவனே அவர்கள் இலங்கை படையினருக்கான தையல் பயிற்சிகளுக்கான வாய்ப்புக்களை மேம்படுத்தி கொடுத்திருந்ததோடு, கடந்த ஒக்டோபர் மாதம் அவர் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்வதற்கான உபகரணங்களையும் பரிசளித்தார்.

பிராந்திய அமைதி, இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் ஒன்றோடொன்று இணைந்த பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்காக பங்காற்றிய இராணுவ தளபதி என்ற வகையில் அவருக்கு இலங்கையின் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் அனுப்பட்ட வாழ்த்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

இந்திய இராணுவ பதவி நிலை பிரதானியாக உங்களது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரான வாழ்க்கையை ஆரம்பிக்கும் நாள் மிகவும் சிறப்பானதாக அமையட்டும் என வாழ்த்துகிறேன், 31 டிசம்பர் 2019 அன்று இந்திய இராணுவத்தின் 28 வது பதவி நிலை பிரதானியாக நீங்கள் பொறுப்பேற்றதில் இருந்து, அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட இராணுவ அதிகாரியாக உங்களது அறிவு மற்றும் தளபதி என்ற வகையில் உங்களது அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இந்திய இராணுவத்தை முன்னேற்றம் காணச் செய்தீர்கள். உலகின் மிகச்சிறந்த இராணுவங்களில் ஒன்றான இந்திய இராணுவம் அறிவு, நேர்மை மற்றும் தேசபற்று நம்பகத்தன்மை மற்றும் உண்மை தன்மையையும் உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்திய அமைதி, இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் ஒன்றோடொன்று இணைந்த பாதுகாப்பு கட்டமைப்பை வலுவூட்டிய பாதுகாப்பு துறையின் கட்டமைப்புக் கலை நிபுணராக விளங்கிய நீங்கள் உலகின் சிறந்த இராணுவ தளபதிகளில் ஒருவராவீர்கள்.

“இராணுவத் தளபதியாக நீங்கள் பதவி வகித்த காலத்தில்”, “இந்தியா மற்றும் இலங்கை இராணுவங்கள் பல நன்மைகளைப் பெற்றுக்கொண்டதுடன், சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ளவும் முடிந்தது” அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்திற்கு இராணுவ பயிற்சி வழங்குதல், இலங்கை இராணுவத்திற்கான உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நிதி உதவிகளை வழங்கல், கொள்கை ரீதியான அபிவிருத்தி, இராணுவ நிபுணத்துவம் பரிமாற்ற திட்டங்க்ள, பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் ஒன்றிணைந்த வழிகாட்டுதல்கள் இலங்கை இராணுவத்திற்கு இராணுவப் பயிற்சி வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நன்கொடைகளை வழங்குதல், கொள்கை ரீதியான மேம்பாடுகள், இராணுவத்தின் நிபுணத்துவ பரிமாற்ற திட்டங்கள், பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சிகள், ஆகியவற்றுக்காகவும் பாரம்பரிய நட்புறவுகளுக்கு அப்பால் சென்று தனிப்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் இலங்கைக்கான மருத்துவ உதவிகள் என்பவற்றை இரு நாட்டு இராணுவங்களும் தானும் என்றும் மறவோம். மேலும் எனக்காகவும் இலங்கை இராணுவத்திற்காகவும், இலங்கைக்காகவும் நீங்கள் செய்த உதவிகளுக்கு மிகுந்த நன்றி.”

உங்கள் அறிவுத்திறன் மற்றும் ஆர்வம் காரணமாக இந்திய தாயின் உண்மையுள்ள மகனாக உங்களது சேவை என்றும் தொடரும் எனவும் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையை கழிக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்” என்றும் கடிதத்தில் குறிப்பிடத்தப்பட்டுள்ளது.

புகைப்படங்களினூடான சில நினைவுப் பதிவுகளை அறிந்துகொள்ள முடியும்.

இலங்கை இராணுவம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.