அதானியின் அடுத்த அதிரடி அறிவிப்பு.. மிகப் பெரிய அரிசி நிறுவனத்தை வாங்கி அசத்தல்!

அதானி குழுமம் தங்களது உணவு வணிகத்தை வலுப்படுத்தப் பாரம்பரிய பாஸ்மதி அரிசியை விற்பனை செய்யும், கோஹினூர் நிறுவனத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

அதானி வில்மர் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே ஃபார்ச்யூன் என்ற பெயரில் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், கடலை மாவு, சர்க்கரை, பட்டாணி போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது.

கோஹினூர் பிராண்ட்

அதன் அடுத்தகட்டமாக வளர்ச்சி திட்டமாக ஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோஹினூர் பிராண்ட் பாஸ்மதி அரிசி நிறுவனத்தை அதானி வில்மர் வாங்கியுள்ளது.

என்ன விலை?

என்ன விலை?

கோஹினூர் நிறுவனத்தை அதானி வில்மர் வாங்கியதாகக் கூறப்பட்டாலும் என்ன விலைக்கு வங்கியது என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதன் மதிப்பு சுமார் 150 கோடியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சார்மினார் அரிசி

சார்மினார் அரிசி

கோஹினூர் நிறுவனம் பிரீமியம் பாஸ்மதி அரிசியை சார்மினார் மற்றும் டிராப்பி என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. கோஹினூர் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் அதானி வில்மர் உணவு பிரிவில் அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ஆங்ஷு மல்லிக் கூறியுள்ளார்.

லாபம்
 

லாபம்

அதிக வரிச் செலவுகள் காரணமாக மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் (Q4) ஒருங்கிணைந்த நிகர லாபம் 26 சதவீதம் சரிந்து 234.29 கோடி ரூபாயாக உள்ளதாகத் திங்கட்கிழமை அதானி விலமர் நிறுவனம் அறிவித்து இருந்தது.

பங்குகள்

பங்குகள்

அதானி வில்மர் நிறுவனம் அண்மையில் ஐபிஓ மூலம் 3,600 கோடி ரூபாய் நிதியைத் திரட்டியது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு இந்த பங்குகள் 200 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani Wilmar Acquired Kohinoor Rice Brand To Strengthens Its Presence In FMCG Segment

Adani Wilmar Acquired Kohinoor Rice Brand To Strengthens Its Presence In FMCG Segment | அதானியின் அடுத்த அதிரடி அறிவிப்பு.. மிகப் பெரிய அரிசி நிறுவனத்தை வாங்கி அசத்தல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.