உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு எப்போது முடிவுக்கு வரும்? கசிந்த முக்கிய தகவல்


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது மேலும் நான்கு மாதங்கள் வரையில் நீடிக்கும் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கணிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த தகவலானது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இராணுவ தரப்பில் இருந்தே கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது சிறப்பு இராணுவ நடவடிக்கை எனக் கூறிக் கொண்டு, கொடூரமான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது

ரஷ்யா.
மட்டுமின்றி, மரியுபோல், புச்சா பகுதிகளில் போர் குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது அம்பலமானதுடன், சர்வதேச விசாரணைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவோம் என களமிறங்கிய ரஷ்ய துருப்புகள், 2 மாதங்கள் கடந்தும் உக்ரைனில் போரிட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே, உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையானது செப்டம்பர் மாதம் முடிவுக்கு வரும் என தகவல் கசிந்துள்ளது.

மேலும், உக்ரைன் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புகள், கொல்லப்பட்ட தங்கள் சக வீரர்களை மூன்று தகன வாகங்கலில் எரியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய உளவு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரஷ்ய துருப்புகள் வெளியேறும் நடவடிக்கையில் ஆயத்தமாகி வருவதாக தெரிய வந்துள்ளது.

ஆனால், துறைமுக நகரமான மரியுபோலில் கைப்பற்றப்பட்ட பகுதிக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களை வெளியிட்டு ரஷ்யா உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மரியுபோல் அல்லது புச்சா ஆகிய பகுதிகள் ரஷ்ய துருப்புகளால் ஏற்கனவே மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ளது.

அதில், ரஷ்ய தரப்பிலான மருத்துவமனைகள், கல்வி கூடங்கள், காவல்துறை அதிகாரிகள் மையம் என உருவாக்கும் ரஷ்யாவின் முயற்சி எந்த அளவுக்கு பலன்தரும் என்பது கண்டறியவேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மரியுபோல் மற்றும் புச்சா நகரம் ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களால் 90% வரையில் சிதைக்கப்பட்டுள்ளது.
Kherson பகுதியிலும் அடுத்த மாதம் முதல் உத்தியோகப்பூர்வ ஆவணங்களை ரஷ்யா வெளியிட உள்ளது.

மட்டுமின்றி, உக்ரைனில் கைப்பற்றப்பட்ட பகுதியில் ரஷ்ய மக்களை குடியேற்றும் திட்டமும் புடின் நிர்வாகத்திற்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.