துபாய்-ஐ பின்னுக்குத்தள்ளிய டெல்லி.. கேட்வே இனிமையா இருக்கு..!!

கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தியா மட்டும் இல்லாமல் உலகளாவிய விமானப் போக்குவர்த்து சேவையில் மிகப்பெரிய மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய தலைநகர் டெல்லி விமான நிலையத்திற்குப் புதிய மகுடம் கிடைத்துள்ளது.

800% & 1400% டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனங்கள்..இந்த 2 பங்குகளை வாங்கி போடுங்க..!

டெல்லி விமான நிலையம்

டெல்லி விமான நிலையம்

மார்ச் மாதத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களைக் கையாளும் எண்ணிக்கை அடிப்படையில் டெல்லி விமான நிலையம் உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் என்று உலகளாவிய பயணத் தரவு வழங்குநரான அபிசியல் ஏர்லைன் கைய்டு (OAG) வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அட்லாண்டா

அட்லாண்டா

மேலும் அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம் மார்ச் மாதமும் தொடர்ந்து தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் கடந்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் மூன்றாவது இடத்தில் இருந்த டெல்லி விமான நிலையம், மார்ச் மாதத்தில் துபாய் விமான நிலையத்தை 3வது இடத்திற்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கொரோனா தொற்று
 

கொரோனா தொற்று

கொரோனா தொற்றுக்கு முன்பு டெல்லி விமான நிலையம் மார்ச் 2019 இல் 23வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாத நிலவரத்தின் படி அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா விமான நிலையம் 4.42 மில்லியன் பயணிகளையும், இந்தியாவில் டெல்லி விமான நிலையம் 3.61 மில்லியன் பயணிகளையும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் விமான நிலையங்கள் 3.55 மில்லியன் பயணிகளை(இருக்கைகள்) கையாண்டு உள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள்

பயணக் கட்டுப்பாடுகள்

COVID-19 தொற்றுநோய் உலகை கடுமையாகப் பாதித்தது. பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பயணம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மோசமாகப் பாதித்தன. குறிப்பாக வெளிநாட்டு விமானச் சேவைகளுக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டு வான்வழி எல்லை அனுமதி முடக்கப்பட்டன.

தடுப்பூசி பாதுகாப்பு

தடுப்பூசி பாதுகாப்பு

ஆனால் இப்போது, உலகம் முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வெளிநாட்டு விமானச் சேவைகளுக்கு அனுமதி வழங்குவதாலும் விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விமானப் பயணிகள்

விமானப் பயணிகள்

மேலும் இந்தியாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் விலை உயர்வால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் முதல் முறை விமானப் பயணம் செய்யும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Delhi pipped Dubai as world’s second busiest airport in March

Delhi pipped Dubai as world’s second busiest airport in March துபாய்-ஐ பின்னுக்குத்தள்ளிய டெல்லி.. கேட்வே இனிமையா இருக்கு..!!

Story first published: Tuesday, May 3, 2022, 20:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.