மர்மமான முறையில் பிரித்தானியக் குழந்தை மாயமான வழக்கு: ஜேர்மன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்


பிரித்தானியக் குழந்தை ஒருத்தி போர்ச்சுகல்லில் மர்மமான முறையில் மாயமான வழக்கில் முக்கிய தடயம் கிடைத்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து வழக்கு பரபரப்படைந்துள்ளது.

Leicestershireஐச் சேர்ந்த Kate மற்றும் Gerry McCann தம்பதியர், 2007ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் திகதி, தங்கள் குழந்தைகளான Madeleine McCann, இரட்டையர்களான Sean மற்றும் Amelieயுடன் போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.

பிள்ளைகளை தாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தூங்கவைத்துவிட்டு, அருகிலுள்ள ஹொட்டல் ஒன்றிற்கு சாப்பிடச் சென்றிருந்தார்கள் பெற்றோர். அவர்கள் திரும்பி வந்தபோது, கட்டிலில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த Madeleine மாயமாகியிருந்தாள்.

அவளை அருகில் உள்ள இடங்களில் தேடியும் கிடைக்காததால் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

நேற்றுடன், Madeleine காணாமல் போய் 15 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவள் என்ன ஆனாள் என்பது இதுவரையிலும் தெரியவேயில்லை…

இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், 2020ஆம் ஆண்டு, Christian Brueckner (45) என்ற நபர் மீது பொலிசாரின் கவனம் திரும்பியது.

அந்த நபர், ஏற்கனவே ஒரு பெண்மணி மற்றும் சிறுமியை வன்புணர்ந்தது, மற்றும் ஆபாசமாக நடந்துகொண்டது என சில வழக்குகளில் சிக்கி சிறையிலிருக்கிறார்.

அவர் Madeleine காணாமல் போன அன்று, அவள் காணாமல் போன இடத்துக்கு அருகில் மொபைல் பயன்படுத்தியது தெரியவந்தது. ஆனால், தான் தனது வேனில் 18 வயது பெண் ஒருத்தியுடன் உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருந்ததாக கூறினார் Brueckner.

வழக்கில் திடமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் வழக்கு இழுத்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக வழக்கை விசாரித்து வரும் ஜேர்மன் அதிகாரியாகிய Hans Christian Wolters என்பவர் தெரிவித்துள்ளார்.

எங்களுக்குப் புதிய சில உண்மைகள் தெரியவந்துள்ளன என்று கூறியுள்ள Wolters, எங்களுக்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது, அது தடயவியல் ஆதாரம் அல்ல, உண்மையான ஆதாரம் என்று கூறியுள்ளார்.

அது என்ன என்று அவர் கூறாவிட்டாலும், Madeleineஐ Brueckner தனது வேனில் கடத்திச் சென்ற அன்று, அவள் அணிந்திருந்த பைஜாமாவிலுள்ள நூலிழைகள் அந்த வேனிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Madeleine கொல்லப்பட்டுவிட்டாள், அவளது கொலைக்கும் Bruecknerக்கும் தொடர்பு உள்ளது என Wolters உறுதியாகக் கூறி வரும் நிலையில், நேற்று தங்கள் மகள் காணாமல் போய் 15 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரார்த்தனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவளது பெற்றோரோ, இப்போது கிட்டத்தட்ட 19 வயதாகும் தங்கள் மகள், எங்கோ உயிருடன் இருக்கிறாள் என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சோகமான விடயம்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.