கிரிப்டோகரன்சி மோசடியில் சிக்கி ரூ.1.5 கோடி இழந்த இரு காவலர்கள்.!

போலி கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் முதலீடு செய்த தமிழக காவல்துறையை சேர்ந்த இரு காவலர்கள் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை இழந்துள்ளனர்.

காவல் துறையினர் தீய பழக்கவழக்கங்களில் இருந்து விலகுவது குறித்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், Bit fund mining investment company மற்றும் online bitcoin trading ஆகிய நிறுவனங்கள் பெயரில் பல தவணைகளாக பணத்தைக் கட்டி இரு காவலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காவலர்களே இது போன்ற ஆசை அறிவிப்புகளை நம்பி பணத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், காவலர்கள் சேமிப்புகளை தரமான வங்கி மற்றும் முதலீடுகளில் செலுத்தி ஆதாயங்களை பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.