உதவுங்கள்… இலங்கை மக்களை நாடும் காவல்துறை


 இலங்யைில் ஏற்பட்ட கலவரத்தின் போது வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க உதவுமாறு பொதுமக்களிடம் இலங்கை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதியாக போராடி வந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

இலங்கையில் பல்வேறு இடங்களில் மகிந்த குடும்ப வீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இலங்கை தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற வன்முறையில் 8 பேர் பலியாகியுள்ளனர். 231 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கலவரத்தின் போது வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க உதவுமாறு பொதுமக்களிடம் இலங்கை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

உதவுங்கள்... இலங்கை மக்களை நாடும் காவல்துறை

அனுரவுடன் அமெரிக்கத் தூதுவர் திடீர் சந்திப்பு! 

அதன்படி, நாடு தழுவிய பதற்றத்தை அடுத்து வீடுகள் மற்றும் வணிக இடங்களை சூறையாடிய நபர்களின் விவரங்களை 1997 மற்றும் 119 என்ற அவசர தொலைபேசி எண்கள் மூலம் தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

உதவுங்கள்... இலங்கை மக்களை நாடும் காவல்துறை

மேலும், இதுபோன்ற தகவல்களை வழங்குபவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், அவர்களின் பெயர்கள் வெளியில் தெரியாதவாறு பாதுகாக்கப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.