iQOO Neo 6: குறைந்த விலையில் பவர்ஃபுல் போன் – விலை மற்றும் அம்சங்கள் என்ன?

சீனாவின் iQOO நிறுவனம், தனது புதிய பிரீமியம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடுகிறது. அதிரடி அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,000க்கும் குறைவாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

iQOO Neo 5 சீனாவில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, புதிய
ஐக்யூ நியோ 6
ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தயாராகி வருகிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகனின் 870 சிப்செட் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போனிலும் இதே சிப்செட் தான் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐக்யூ நியோ 6 போனின் சீன வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் நிறுவப்பட்டுள்ளது.

Oppo Reno 8: இது சாம்சங் போனா… இல்ல ஒன்பிளஸ் போனானு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

ஐக்யூ நியோ 6 அம்சங்கள் (iQOO Neo 6 Specifications)

வெளியாக தயாராக இருக்கும் புதிய ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனில், 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட, 1300 நிட்ஸ் பிரைட்னஸ் உடன் வரும் 6.62″ சாம்சங் E4 அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்படும். இதில் Android 12 அடிப்படையிலான இயங்குதளம் இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 அல்லது 870+ 5ஜி புராசஸர் கொண்டு இயக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போனில் LPDDR5 வெர்ஷனில் வரும் 8GB அல்லது 12GB என இரு ரேம் தேர்வுகள் கொடுக்கப்படலாம். மேலும், இதன் ஸ்டோரேஜ் 128GB / 256GB ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

WhatsApp Update: இனி லிங்க் தகவல்களை தெளிவாகப் பார்க்கலாம்!

ஐக்யூ நியோ 6 கேமரா (iQOO Neo 6 Camera)

ஸ்மார்ட்போனின் கேமராவைப் பொருத்தவரை பின்பக்கம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் வரும் 64MP மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2MP மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைக் கொண்ட டிரிப்பிள் கேமரா அமைப்பு உள்ளது.

முன்பக்க டிஸ்ப்ளே நாட்சில், 16MP மெகாபிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 80W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 4,850mAh பேட்டரி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Netflix New Feature: நேரலை ஷோக்களை நடத்த நெட்பிளிக்ஸ் திட்டம்!

ஐக்யூ நியோ 6 விலை (iQOO Neo 6 Price)

டார்க் நோவா மற்றும் இண்டெர்ஸ்டெல்லார் எனும் இரு நிறத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இதன் அடிப்படை மாடல் ரூ.27,000க்கும், மேம்பட்ட மாடல் ரூ.31,000க்கும் வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

இந்த ஸ்மார்ட்போன், அடுத்த வாரம் இந்திய பயனர்களுக்காக வெளியிடப்படுகிறது. மேலும், ஜூன் முதல் வாரத்தில், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.