சிதம்பரம் நடராஜர் கோவில்.. கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி.. தமிழக அரசு அரசாணை.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது எறி வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களிடம் இருந்து பூஜை பொருட்களைப் பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல், சாமிகளை தொட்டு தரிசனம் செய்தல் மற்றும் அங்கப்பிரதட்சணம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு கோயில் வளாகத்தில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வழிபாட்டு தளங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும் ஏற்கனவே இருந்த வழிபாட்டு நெறிமுறைகள் மீண்டும் தொடரும் நிலையில், சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோயில் நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்திருந்தனர்.

இந்தநிலையில் கனகசபை மீது ஏறி வழிபடும் நடைமுறை தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது எனக் கூறிய இந்து சமய அறநிலைத்துறை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜர் ஆன சபாநாயகரை தரிசிக்க அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.