உணவையே ஆயுதமாக மாற்றும் ரஷ்யா.. அச்சத்தில் உலக நாடுகள்.. விலைவாசி என்னவாகுமோ?

உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான மோதல் போக்கானது பல வாரங்களாகவே நீண்டு கொண்டுள்ளது. இது இப்போதைக்கு முடிவுக்கு வருமா? என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுவரையில் நேர் எதிராக மோதி வந்த நாடுகள், தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் வைத்து களமிறங்க தொடங்கியுள்ளன.

சமீபத்தில் ரஷ்யா ஐரோப்பாவுக்கு அனுப்பும் எரிபொருள் பாதையினை, உக்ரைன் தடை செய்தது. இந்த நிலையில் தற்போது உக்ரைனுக்கு எதிராக உணவினையே ஆயுதமாக மாற்றியுள்ளது ரஷ்யா.

ஸ்டார்ட்அப் ஊழியர்களே உஷார்.. அடுத்த 30 நாள் திக் திக்..! #Layoff

எப்படி தெரியுமா?

எப்படி தெரியுமா?

உக்ரைனுக்கு எதிராக போர் செய்து வரும் ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக நேரிடையான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. தற்போது மறைமுகமாகவும் உக்ரைன் மீது அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைனில் இருந்து உலக நாடுகளுக்கு செல்லக்கூடிய 2 கோடி டன் உணவு தானியங்களை ரஷ்யா தடுத்துள்ளது.

விலையை அதிகரிக்கலாம்

விலையை அதிகரிக்கலாம்

இது உலகளவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளவில் உணவு பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, விலைவாசி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், விலைவாசியானது சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

அமெரிக்கா குற்றச்சாட்டு
 

அமெரிக்கா குற்றச்சாட்டு

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், உக்ரைன் கருங்கடல் துறைமுகங்கள் மீதான தடையை ரஷ்யா நீக்கி, உலகம் முழுவதும் உணவு மற்றும் உரங்களின் சப்ளையை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் உணவு பற்றாக்குறைக்கு மத்தியில், உலகின் உணவு சப்ளையை ரஷ்யா பிணையக் கைதியாக பிடித்து வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

உணர்வுகளை உடைக்க முயற்சி

உணர்வுகளை உடைக்க முயற்சி

உக்ரேனிய மக்களின் உணர்வுகளை உடைக்க ரஷ்யா இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம். படை மூலம் சாதிக்க முடியாததை இப்படியேனும் சாதிக்கலாம் என ரஷ்யா நினைக்கிறது போல என அமெரிக்க தரப்பில் கூறப்படுகின்றது.

ரஷ்யா - உக்ரைன் பங்கு

ரஷ்யா – உக்ரைன் பங்கு

ரஷ்யாவும் உக்ரைனும் உலகளாவிய கோதுமை சப்ளையில் 30%மும், சன் பிளவர் ஆயில் உற்பத்தியில் 60%மும் பங்கு வகிக்கின்றன. இது மட்டும் அல்ல இன்னும் பல முக்கிய பொருட்கள் ஏற்றுமதியினை உக்ரைன் செய்து வருகிறது.

பார்லி, மக்காச்சோளம், மெஷினரி என பலவும் இதில் அடங்கும். ஆக ரஷ்யாவில் இந்த ஒற்றை நடவடிக்கையினால், நிச்சயம் உலகளவில் உணவு பொருட்கள் விலையானது தாறுமாறான ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

US accused Russia using food as a weapon

Russia blocked 20 million tons of food grains from Ukraine to the rest of the world. This is expected to cause major trouble globally. This could lead to global food shortages and increase prices.

Story first published: Friday, May 20, 2022, 13:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.