சுவிட்சர்லாந்தில் முதல் குரங்கம்மை தொற்று பாதிப்பு உறுதி!


சுவிட்சர்லாந்தில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் வசிக்கும் ஒருவருக்கு நாட்டின் முதல் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமையன்று அறிவித்தனர்.

அந்த நபர் வெளிநாட்டில் இருந்தபோது குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு தானாக சிகிச்சைக்கு வந்த அந்த நோயாளிக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இப்போது அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெர்னின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

குரங்கம்மையை ஆயுதமாக்க திட்டமிட்ட ரஷ்யா! முன்னாள் சோவியத் விஞ்ஞானியின் தகவலால் பரபரப்பு 

சுவிட்சர்லாந்தில் முதல் குரங்கம்மை தொற்று பாதிப்பு உறுதி!

அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று சுகாதார அதிகாரிகளுக்கு இந்த வழக்கு தெரிய வந்தது, அடுத்த நாள் அது குரங்கம்மை என உறுதி செய்யப்பட்டது.

ஏற்கெனவே, குரங்கம்மை வைரஸ் பரவிவருவதை உறுதிசெய்துள்ள பிரித்தானியா, ஜேர்மனி, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளின் பட்டியலில் தற்போது சுவிட்சர்லாந்து இணைந்துள்ளது.

மேலும் இஸ்ரேல் நாட்டிலும் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சத்தை அத்கிரிக்கச்செய்துள்ளது. 

பிரான்சில் சுற்றுலா பயணிகள் சென்ற விமானம் விபத்து: 5 பேர் மரணம் 

சுவிட்சர்லாந்தில் முதல் குரங்கம்மை தொற்று பாதிப்பு உறுதி!

இதனிடையே, குரங்கம்மை வைரஸ் ஐரோப்பா முழுவதும் பரவுவதால், வரும் மாதங்களில் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குநர் Hans Kluge வெள்ளிக்கிழமை எச்சரித்தார்.

காய்ச்சல், தசைவலி, வீங்கிய நிணநீர் கணுக்கள், குளிர், சோர்வு மற்றும் கைகளிலும் முகத்திலும் சிக்கன்பாக்ஸ் போன்ற சொறி போன்றவை இந்த அரிய நோயின் அறிகுறிகளாகும்.

அசுத்தமான நபரின் தோல் புண்கள் அல்லது நீர்த்துளிகள் மற்றும் படுக்கை அல்லது துண்டுகள் போன்ற பகிரப்பட்ட பொருட்களின் மூலம் இந்த குரங்கம்மை வைரஸ் பரவுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, குரங்கு அம்மை (Monkeypox) பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு சரியாகிவிடும்.

சுவிட்சர்லாந்தில் முதல் குரங்கம்மை தொற்று பாதிப்பு உறுதி!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.