Tamil News Today Live: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

Tamil Nadu News Updates: சென்னையில் பெட்ரோல் விலை ரூ8.22 குறைந்து ரூ102.63க்கும், டீசல் விலை ரூ6.70 குறைந்து ரூ94.24க்கும் விற்பனையாகிறது. சுமார் 45 நாள்களுக்கு பிறகு விலையில் மாற்றம் வந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைந்த நிலையில்,பல மாநிலங்களிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு – 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி. காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனை

ஆறு பேரை விடுவிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் மேலும் ஆறு பேரை விடுவிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை. தலைமை செயலர், சட்ட வல்லுநர்கள் பங்கேற்பு

ஐபிஎல்: பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஆர்சிபி

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியுற்றதன் காரணமாக 4வது இடத்தை தக்கவைத்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு அணி

Live Updates
08:32 (IST) 22 May 2022
தேனி வைகை அணையில் தண்ணீர் திறக்க பரிந்துரை

தேனி வைகை அணையில் இருந்து ஜூன் 2 முதல் தண்ணீர் திறக்க பரிந்துரை. பாசனத்திற்காக திறக்க தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறையினர் பரிந்துரை

08:14 (IST) 22 May 2022
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. வெள்ளப்பெருக்கு காரணமாக 3 நாட்களாக குளிக்க தடை விதித்திருந்த நிலையில் மீண்டும் அனுமதி

08:05 (IST) 22 May 2022
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடியில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை முதல் 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தம். இதனால் 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

07:54 (IST) 22 May 2022
செஸ் வரியை குறைக்காமல்கலால் வரியை மட்டும் குறைப்பது ஏன்? – ப.சிதம்பரம்

பெட்ரோல் விலையை 2 மாதங்களில் 10 ரூபாய் உயர்த்திவிட்டு, ரூ9.50 மட்டும் குறைப்பதா. செஸ் வரியை குறைக்காமல் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டிய கலால் வரியை மட்டும் குறைப்பது ஏன் என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

07:53 (IST) 22 May 2022
இதுதான் கூட்டாட்சியா?: பழனிவேல் தியாகராஜன்

எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது மத்திய அரசு. தற்போது, உயர்த்தி விலையை குறைக்கச் சொல்லி மாநிலங்களிடம் கேட்பது தான் கூட்டாட்சியா? 2014 முதல் பெட்ரோல் ரூ23, டீசல் ரூ29 என மத்திய அரசு தனது வரியை உயர்த்தியுள்ளது. ஆனால், உயர்த்தியதில் இருந்து 50சதவீதம் குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.