யார் இந்த அந்தோனி அல்பேனீஸ்: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர்!

ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும்
தொழிலாளர் கட்சி
தலைவர்
அந்தோனி அல்பேனீஸ்
ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆஸ்திரேலியாவில் ஆட்சியை கைப்பற்ற மொத்தமுள்ள 151 இடங்களில் 76 இடங்களில் பெரும்பான்மை தேவை என்ற நிலையில், அந்தோனி அல்பேனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சி தலைவர்
அந்தோனி நார்மன் அல்பேனீஸ்
பொறுப்பேற்றுக் கொண்டார். நாட்டின் 31வது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட அவருடன் 2 பெண்கள் உள்பட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் தொழிலாளர் கட்சி ஆஸ்திரேலியாவில் ஆட்சியை பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அந்தோனி நார்மன் அல்பேனீஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியா
– சீனா இடையேயான உறவுகள் உருவாக்கப்பட்டு, இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் உட்பட முக்கிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இன்னும் இறுதி செய்யப்படாத நேரத்தில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

“அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பணியை ஒன்றாக தொடங்குவோம்.” என்று வெற்றி பெற்றதும் அந்தோனி நார்மன் அல்பேனீஸ் தெரிவித்துள்ளார்.

புயல், மழை… இருளில் மூழ்கிய கனடா!

1963ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிட்னியில் பிறந்த அந்தோனி நார்மன் அல்பேனீஸ், தொழிலாள வர்க்க சுற்றுப்புறத்தில் அவரது தாயாரால் வளர்க்கப்பட்டவர். இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்த அவர், தொழிலாளர் கட்சியில் சேர்ந்து படிப்படியாக வளர்ந்தவர். ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், நீண்ட அனுபவத்தை கொண்டிருப்பவர்.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, சிட்னி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிப்பதற்கு முன்பு காமன்வெல்த் வங்கியில் பணியாற்றினார். தொழிலாளர் கட்சியின் நியூ சவுத் வேல்ஸ் (இடது) பிரிவுடன் இணைந்து பணியாற்றிய அவர், நியூ சவுத் வேல்ஸ் தொழிலாளர் கட்சியின் உதவி செயலாளராக ஆனார். நியூ சவுத் வேல்ஸில் உள்ள கிரேண்ட்லர் தொகுதியில் முதன்முதலாக 1996ஆம் ஆண்டு தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.