சென்னை, பெங்களூரை விடுங்க.. மும்பை பணியமர்த்தலில் 41% வளர்ச்சி.. சம்பள வளர்ச்சி எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் நிதி தலை நகரமான மும்பை, வேலை தேடுபவர்களுக்கு மிகவும் பிடித்தமான நகரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு போர்டல் நாக்ரி. காம், வேலை தேடுபவர்களுக்கு மிக லாபகரமான நகரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

கடந்த மார்ச் காலாண்டில் பணியமர்த்தலில் மும்பையில் 41 சதவீதம் வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

நாக்ரி அறிக்கையின் படி, தொற்று நோய்க்கு பிந்தைய காலத்தில் மகாராஷ்டிராவின் தலை நகர் சம்பள உயர்வில் 18% அதிகமான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது மற்ற நகரங்களின் பெரு நகரங்களை விட கணிசமாக அதிகமாகும். இது சராசரியாக 11 சதவீதத்திற்கும் மேல் சம்பள உயர்வை பதிவு செய்துள்ளது.

 துறை வாரியாக பணியமர்த்தல்

துறை வாரியாக பணியமர்த்தல்

இதுவே சராசரியாக பெங்களூரில் 15% வளர்ச்சியும், டெல்லியில் 12% வளர்ச்சியும், இந்தியாவில் 11% வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது.

இவ்வாறு பணியமர்த்தப்பட்டதில் வங்கி மற்றும் நிதி துறை, கல்வித் துறையில் 60% வளர்ச்சியும், ரியல் எஸ்டேட் துறையில் 57% வளர்ச்சியும், பார்மா துறையில் 34% வளர்ச்சியும், பிபிஓ துறையில் 22% வளர்ச்சியும் கண்டுள்ளன. இதில் குறிப்பாக மும்பை 41% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.

 

எந்த துறையில் அதிகம்
 

எந்த துறையில் அதிகம்

அதேபோல பிரெஷ்ஷர்களுக்காக தேவையானது 50% அதிகரித்துள்ளது. சம்பள அதிகரிப்பில் 33% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த பணியமர்த்தலில் வங்கிகள், நிதி சேவை மற்றும் இன்சூரன்ஸ் துறை மற்றும் கல்வித் துறையானது பணியமர்த்தலில் மிகப்பெரிய அளவு உள்ளது.

தொலை தூரத்தில் இருந்தே பணி

தொலை தூரத்தில் இருந்தே பணி

அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு கடந்த ஆண்டினை காட்டிலும் 50% அதிகரித்துள்ளது. இளநிலை பட்டதாரிகளுக்கு மும்பையில் 75%மும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தற்போது மீண்டும் பணிக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். எனினும் மும்பையில் தற்போதும் கூட வீட்டில் இருந்தே பணியாற்ற நிறுவனங்கள் அனுமதி கொடுத்துள்ளன. 4வது காலாண்டில் 11% பேர் தொலை தூரத்தில் இருந்தே வேலை பார்த்து வந்துள்ளதாக பதிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Naukri.com report says Mumbai sees 41% growth in hiring

Mumbai, the financial capital of India, is seen as one of the most favorite cities for job seekers. Recruitment in Mumbai grew by 41% in the March quarter.

Story first published: Tuesday, May 24, 2022, 20:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.